More
Categories: Cinema History Cinema News latest news

குழந்தைகளை வளர்ப்பதில் இவ்ளோ விஷயங்கள் இருக்கா? டிப்ஸ்களை அள்ளி வீசிய சின்னக் கலைவாரணர்!..

நடிகர் விவேக் கலைவாணரின் சிந்தனைகளைக் கடைபிடித்து வருபவர். அப்துல்கலாமின் மரம் நடுதலை ஆதரித்து லட்சக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டியவர். திரைப்படங்களில் காமெடியுடன் சமுதாய சிந்தனைகளையும் அவ்வப்போது விதைத்தவர். அதனாலேயே இவரை ரசிகர்கள் சின்னக்கலைவாணர் என்று அன்புடன் அழைக்கின்றனர்.

பெற்றோர்களுக்கு சின்னக்கலைவாணர் விவேக் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… ரஜினியை கண்டெக்டராக காதலித்து நடிகராக்கிய காதலி… ஆனால் கடைசியில் நடந்தது தான் கொடுமை!…

குழந்தைகள் வளர்ப்பது ஒரு கலை. அதில் அறிவியலும் உள்ளது. அவர்கள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியுடன் இருங்க. அவர்கள் தான் உங்களின் ஆதாரம். உங்களது நிறைவேறாத கனவுகளை அவர்களிடம் திணித்து விடாதீர்கள். அவர்களது ஆசைகள் என்னென்ன என்று கண்டுபிடிங்க.கார் மெக்கானிக்கில் ஆர்வம் உள்ள மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள்.

அவனுக்குப் பிடித்த துறைகளைத் தேர்ந்தெடுக்க அனுமதி அளியுங்கள். அவன் வாழ்வு மகிழ்ச்சி பூங்காவாகும். தோனியைப் பார்த்துவிட்டு பையனை கிரிக்கெட் கோச்சிங்கிற்கு அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருக்கலாம். டென்னிஸ்சில் ஆர்வமுள்ள மகளை பரதநாட்டியத்திற்கு அனுப்பாதீர்கள்.

வீட்டுக்குள் எந்த நேரமும் அவர்களை அடைத்து வைக்காதீர்கள். தெருவில் இறங்கி புழுதியில் விளையாடி வியர்த்து விறுவிறுக்க வீட்டுக்கு வரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும்.

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிரானது. அங்கு பல சவால்களை சமாளிக்க இதுதான் உதவும். பாரதியாரையும், விவேகானந்தரையும் உங்கள் வீட்டு பசங்களுக்கு அறிமுகப்படுத்துங்க. மனம் வளமாகும்.

இதையும் படிங்க… யாரும் செய்யாத சாதனை!. இலங்கையிலும் அசால்ட் செய்த நடிகர் திலகம்!.. படம் இவ்வளவு நாள் ஓடியதா?!..

விசாலமான பார்வை கிடைக்கும். மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு இவற்றின் பலன்களை உணர்ந்த நாம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் மாத்திரைகள் கொடுக்க வேண்டாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியம், அறிவு, அன்பு இவற்றைக் கொடுப்பது நமது கடமை என்பதை உணர்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts