Cinema History
கேப்டன் மேட்டர் கேட்கவே மெர்சலா இருக்கே!.. ஜோடி போட்டு நடிச்சது இவ்வளவு பேரா!.. அடேங்கப்பா!..
கேப்டன் விஜயகாந்த் நம்மை விட்டு மறைந்தாலும் இன்றும் அவரைப் பற்றிய விதவிதமான செய்திகள் நம்மை வியக்கவே வைக்கின்றன. அந்த வகையில் அவர் 85 கதாநாயகிகளுடன் படங்களில் நடித்துள்ளாராம். யார் யாருடன் நடித்துள்ளார் என்று பார்ப்போமா…
நடிகை ஷேபாவுடன் அகல்விளக்கு, பத்மபிரியாவுடன் நீரோட்டம், பூர்ணிமாவுடன் தூரத்து இடி முழக்கம், அருணாவுடன் சிவப்பு மல்லி, ஸ்வப்னாவுடன் நெஞ்சிலே துணிவிருந்தால் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீபிரியாவுடன் செந்தூரப்பூவே, சில்க் ஸ்மிதாவுடன் பட்டணத்து ராஜாக்கள், பரிமளாவுடன் வைதேகி காத்திருந்தாள், மேனகாவுடன் ஓம் சக்தி, ஜோதியுடன் சட்டம் சிரிக்கிறது ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க… கமலின் அந்த ஹிட் பாட்டு தான் கில்லி ஷா லா லா… உண்மையை சொன்ன கபிலன்!…
அதே போல நடிகை விஜியுடன் வெற்றி, அனுராதாவுடன் மதுரை சூரன், சசிகலாவுடன் மெட்ராஸ் வாத்தியார், ஊர்வசியுடன் வெள்ளை புறா ஒன்று ஆகிய படங்களில் நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த்துடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் நளினி. அவற்றில் ஒன்று கரிமேடு கருவாயன். அதே போல அம்பிகாவும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். அவற்றில் ஒன்று தழுவாத கைகள்.
நடிகை ராதாவும் சில படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று நினைவே ஒரு சங்கீதம். நடிகை ராதிகாவும் அப்படித்தான். அவற்றில் ஒன்று தெற்கத்திக் கள்ளன். நடிகை சுகன்யாவுடன் சர்க்கரை தேவன், ஜீவிதாவுடன் நானே ராஜா நானே மந்திரி, சௌந்தர்யாவுடன் சொக்கத் தங்கம், ஜெயப்பிரதாவுடன் ஏழை ஜாதி, சுஜாதாவுடன் தர்மம் வெல்லும், லட்சுமியுடன் காலையும் நீயே மாலையும் நீயே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தேவிஸ்ரீயுடன் குடும்பம், சுலக்ஷனாவுடன் ஜனவரி 1, அர்ச்சனாவுடன் ஏமாறாதே ஏமாற்றாதே, சுதாசந்திரன் உடன் வசந்தராகம், சரிதாவுடன் ஊமைவிழிகள், மாதுரியுடன் அன்னை என் தெய்வம், அமலாவுடன் ஒரு இனிய உதயம், பல்லவியுடன் தர்மதேவதை, ரேகாவுடன் சொல்வதெல்லாம் உண்மை, சுகாசினியுடன் எம் புருஷன் தான் எனக்கு மட்டும் தான், ஷோபனாவுடன் பாட்டுக்கு ஒரு தலைவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
கௌதமியுடன் சந்தனக்காற்று, சீதாவுடன் ராஜநடை, பானுப்பிரியாவுடன் சத்ரியன், சிம்ரனுடன் ரமணா, சுமாரங்கநாத் உடன் மாநகர காவல், கனகாவுடன் கோயில் காளை, ஜெயசுதாவுடன் தவசி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
அதே போல கஸ்தூரியுடன் எங்க முதலாளி, ரேவதியுடன் என் ஆசை மச்சான், வினிதாவுடன் பதவிப்பிரமாணம், ரஞ்சிதாவுடன் பெரிய மருது, குஷ்புவுடன் கருப்பு நிலா, ரவளியுடன் திருமூர்த்தி, ரோஜாவுடன் தமிழ்ச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், சங்கீதாவுடன் அலெக்சாண்டர், ப்ரீதா விஜயகுமாருடன் தர்மா, லைலாவுடன் கள்ளழகரும், தேவயாணியுடன் வல்லரசு, ஷாக்சியுடன் வாஞ்சிநாதன், சமீரா ஷெட்டியுடன் ராஜ்ஜியம், கிரணுடன் தென்னவன், நமிதாவுடன் எங்கள் அண்ணா, ஆஷிமா பல்லாவுடன் சுதேசி ஆகிய படங்களிலும் ஜோடி சேர்ந்துள்ளார்.
இதையும் படிங்க... முதல் தமிழ் சினிமா ஹீரோ!.. ரஜினி படம் செய்யாத சாதனை!.. கில்லி படம் உருவான கதை!..
தெபினாவுடன் பேரரசு, ராய்லட்சுமியுடன் தர்மபுரி, ஜோதிர்மயி உடன் சபரி, நவ்னீத் கர் ரனாவுடன் அரசாங்கம், நதியாவுடன் பூமழை பொழியுது, ரூபினியுடன் கூலிக்காரன், மீனாவுடன் வானத்தைப் போல, ரம்பாவுடன் தர்ம சக்கரம் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.
காயத்ரியுடன் ஆட்டோ ராஜா, வாணி விஸ்வநாத் உடன் நல்லவன், நிரோஷாவுடன் பொறுத்தது போதும், சிவரஞ்சனியுடன் ராஜதுரை, மந்த்ராவுடன் சிம்மாசனம், சுஷந்த் உடன் நிறைஞ்ச மனசு, தீபாவுடன் குழந்தை இயேசு, ரம்யா கிருஷ்;ணனுடன் தம்பி தங்க கம்பி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஜெயஸ்ரீ உடன் நம்பினார் கெடுவதில்லை, நிஷாந்தியுடன் சிறையில் பூத்த சின்னமலர், ஆம்னியுடன் ஆனஸ்ட்ராஜ், இஷா கோபிகருடன் நரசிம்மா, மோகினியுடன் தாயகம், மீரா ஜாஸ்மினுடன் மரியாதை, பிலோராவுடன் கஜேந்திரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரையல் பிரின்ட்ரோவுடன் அரசாங்கம், மாதுரி இட்டாகியுடன் விருத்தகிரி, சங்கவியுடன் உளவுத்துறை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
1979ல் விஜயகாந்த்தின் திரையுலகம் தொடங்கிய இனிக்கும் இளமையில் இருந்து 2015ல் நடித்த சகாப்தத்துடன் நிறைவு பெற்றது. தொடர்ந்து 35 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகனாக நடித்து வந்தார்.