அடையாளமே தெரியலயே!.. நம்ம ஆக்சன் கிங்கா இது?! அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!

ஒரு காலத்தில் ஆக்சன் கிங் என அறியப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர் அர்ஜுன். ஆரம்ப காலகட்டத்தில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்த அர்ஜுன், அதன் பிறகு ஏனோ கதை தேர்வில் நாட்டமில்லாமல் ஏதேதோ திரைப்படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை சுத்தமாக இழந்துவிட்டார்.
இருந்தாலும் இத்தனை வயசாகியும் தனது உடற்கட்டை அப்படியே பேணிப் பாதுகாப்பதனால், தற்போது வரை ஆக்சன் கிங் அர்ஜுன் என்றால் ரசிகர்கள் மனதில் அர்ஜுனும, அவரது கட்டுக்கோப்பான உடற்கட்டும் தான் நினைவில் நிற்கும். அந்த அளவிற்கு ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளார்.
இதையும் படியுங்களேன் - சூர்யா படத்துக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.! இதுல அவுங்களுக்கும் ஆதாயம் இருக்குதுல்ல.!?
இடையிடையே ஏதோ சில நேரம் நல்ல திரைப்படங்களில் நடிப்பார். ஆரம்ப காலங்களில் அவர் நடித்த திரைப்படங்களை அவரே பார்க்க மாட்டாராம். ஆரம்ப காலகட்டத்தில் வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நடித்து வந்தாராம். அதன்பிறகு கதைகளை தேர்வு செய்து நடிக்க தொடங்கினாராம். இதனை அர்ஜுனின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
அப்படி அவர் ஆரம்ப காலகட்டத்தில் அந்த சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரஜினி மீசையில்லாமல் தில்லு முல்லு திரைப்பட ஷூட்டிங்கில் இருப்பதுபோல இருக்கிறார். அர்ஜுன் அப்போது இருக்கும் அந்த புகைப்படத்தில் அர்ஜுனனுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ரொம்ப சின்ன பையன் போல அதில் தென்படுகிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.