Connect with us

Cinema History

படப்பிடிப்பில் ரசிகர்களால் நொந்துப்போன அர்ஜூன்..! பக்க பலமாக நின்ற கவுண்டமணி…

தமிழில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அர்ஜுன். 1979 ஆம் ஆண்டு வந்த எடுத்த சபதம் முடிப்பேன் என்கிற தமிழ் படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் அர்ஜுன்.

அர்ஜுனுக்கு சிறுவயது முதலே கராத்தே போன்ற சண்டை பயிற்சிகள் மீது அதிக ஆர்வம் இருந்தது. ஏனெனில் சிறுவயதிலேயே அவர் நடிகர் புரூஸ்லீயின் படத்தை பார்த்து அதை மாதிரியே ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். அர்ஜுனனின் ஆரம்ப கால திரைப்படங்களில் அந்த மாதிரியான சண்டை காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும்.

arjun-sarja

arjun-sarja

எடுத்த சபதம் முடிப்பேன் திரைப்படத்தை விடவும் அர்ஜுனுக்கு ஒரு நல்ல அறிமுகமாக அமைந்த படம் அதற்குப் பிறகு வந்த நன்றி. இந்த படம் 1984 ஆம் ஆண்டு வந்தது. சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் அர்ஜுன் மிகவும் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்.

இதனால் அதிகமாக விமர்சனத்துக்குள்ளார் அர்ஜுன். சினிமா ரசிகர்களும் சரி, படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்களும் சரி அர்ஜுனை அதிகமாக விமர்சித்தனர். இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளானார் அர்ஜுன். இதனால் சினிமாவை விட்டு சென்றுவிடலாம் என்றெல்லாம் முடிவு எடுத்தார்.

அந்த சமயத்தில் அவருக்கு ஆறுதலாக இருந்தார் நடிகர் கவுண்டமணி. ”ஆரம்ப காலகட்டத்தில் என்னையும் கூட இப்பதான் விமர்சித்தார்கள் ஆனால் நாட்கள் செல்ல செல்ல நமது முகம் அவர்களுக்கு பழகிவிடும் அதன் பிறகு இப்படி விமர்சிக்க மாட்டார்கள்”, என அர்ஜுனுக்கு ஆறுதல் கூறினார் கவுண்டமணி. அதன்பிறகு மீண்டும் சினிமாவில் வழக்கம் போல நடிக்க துவங்கினார் அர்ஜுன்.

இதையும் படிங்க: உதவி கேட்ட துணை நடிகர்!.. இறந்தபிறகும் காசு கொடுத்த எம்.ஜி.ஆர்.. எப்படி தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema History

To Top