ஏம்ப்பா அன்பு..கல்யாணமா? சொல்லவே இல்லை!....திருமண ரகசியத்தை போட்டுடைத்த அர்ஜூன் தாஸ்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கைதி. இந்த படத்தில் அன்பு என்னும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.
தனது கனத்த குரல் மற்றும் உடல்மொழி அசைவுகளின் உணர்வுகள் மக்களிடம் ஈர்ப்பை உண்டாக்கியது. இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் படத்திலும் வில்லனாக காட்டினார் லோகேஷ்.
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அர்ஜூன் தாஸ் சமீபத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் இவரிடம் ரசிகர்கள் அதிகமாக கேட்கும் கேள்வி எப்பொழுது உங்களுக்கு கல்யாணம்? ஏதாவது கேர்ள் ஃபிரெண்ட் இருக்காங்களா? என்ற கேள்விகள் தான் எழுகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் அதற்கு என்னிடம் இப்பொழுது பதில் இல்லை என்று கூறிவிட்டார். மேலும் இந்த கேள்விகளை எல்லாம் ரிஜெக்ட் பண்றேன் என்றும் கூறினார்.