ஜென்டில்மேன் கிளைமேக்ஸில் நடந்த ட்விஸ்ட்... தயாரிப்பாளர் சொன்ன மிகப்பெரிய மாற்றம்.. அப்செட்டான அர்ஜூன்...
இயக்குனர் ஷங்கரின் பிரம்மாண்ட படைப்பில் ஒன்று ஜென்டில்மேன் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி படமாக்கிய பிறகே தயாரிப்பாளர் செய்த மிகப்பெரிய மாற்றத்தால் அர்ஜூன் அப்செட் ஆகிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஷங்கரின் அறிமுக படம் தான் ஜென்டில்மேன். சரத்குமார், டாக்டர் ராஜசேகர் பலர் மிஸ் செய்த கதையில் நடிக்க அர்ஜூன் ஒப்புக்கொண்டு நடித்தார். அப்போதே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு மாஸ் ஹிட் அடித்த இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி வேறு என்பது பலருக்கு தெரியாத விஷயம்.
படத்தின் படப்பிடிப்பை விறுவிறுவென்று முடித்த ஷங்கர், ரிலீஸ் வேளையில் முழ்கி இருக்கிறார். அதே வருடம் நாட்டையே உலுக்கும் ஒரு விபத்து நடந்தது. அப்போதைய இலங்கை பிரதமராக இருந்த ரணசிங்கே பிரேமதாசா கார் விபத்தில் இறந்தார். இது மனித வெடிக்குண்டாக செயல்பட்ட ஒரு சின்ன பையன் செய்தது தான் என செய்தி பரவியது.
இதை கவனித்த கே.டி.குஞ்சுமோன் இதே மாதிரி ஜென்டில்மேன் கிளைமேக்ஸினை மாற்றும்படி ஷங்கரிடம் கூறினார். ஆனால் இதற்கு நடிகர் அர்ஜூன் எதிர்ப்பு தெரிவித்தார். வில்லனை ஹீரோ தானே கொல்வது போல இருக்க வேண்டும். சின்ன பையன் செய்தால் ஹீரோவிற்கு வலு குறைந்து விடுமே என பயந்தார். ஆனால் அவரை சமாதானப்படுத்தி கிளைமேக்ஸை மாற்றி படப்பிடிப்பை முடித்தார் ஷங்கர். இந்த காட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.