அர்ஜூன் நடிக்கும் பிளாஸ்ட் படத்தின் முதல் பார்வை வெளியீடு

Published on: April 25, 2026
arjun blast movie
---Advertisement---

கோட், லவ் டுடே, டிராகன் மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் பிளாஸ்ட். பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனராக பணியாற்றிய சுபாஷ் கே ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன், அபிராமி, பிரீத்தி முகுந்தன், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிளாஸ்ட் படத்தின் மூலம் கே ஜி எஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் பிளாஸ்ட் திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் இன்று வெளியானது.இப்படம் குறித்து இயக்குனர் சுபாஷ் கூறியபோது,
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது இருக்கும். எனது முதல் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருப்பதையும் அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை இயக்கியதையும் மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன் என்றார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இத்திரைப்படம் விரைவில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.