பேய் படம்னு நினைச்சு ஓடிட்டாங்க!.. போன ரசிகர்களை எப்படி தியேட்டருக்கு வரவழைத்தார் தெரியுமா தாணு?
தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராகவும் டிஸ்ட்ரிபியூட்டர் ஆகவும் வலம் வருபவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தனது கலைப்புலி பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் வி கிரியேஷன்ஸ் போன்ற தனது சொந்த நிறுவனங்கள் மூலமாக பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.
கிட்டத்தட்ட 80களில் இருந்து இன்று வரை ஏராளமான திரைப்படங்களை வெளியிட்டு வெற்றியும் கண்டுள்ளார். இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கிழக்குச் சீமையிலே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காக்க காக்க, கந்தசாமி ,துப்பாக்கி, தெறி, கபாலி போன்ற பல சூப்பர் ஹிட் படங்கள் வெளிவந்துள்ளன.
தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் என பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார் தாணு. மகளிர் மட்டும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து நடித்திருப்பார் தாணு.
இந்த நிலையில் இவரின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த படம் யார். இந்தப் படத்தில் அர்ஜுன், நளினி, ஜெய்சங்கர் என பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர். குறிப்பாக ரஜினிகாந்த் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துக் கொடுத்திருப்பார்.
இந்தப் படம் ஒரு ஹாரர் மூவியாகவும் அமைந்திருந்தன. இந்தப் படத்தைப் பற்றிய ஒரு சுவாரசியமான அனுபவத்தை ஒரு பேட்டியின் மூலம் தாணு விவரித்து இருக்கிறார். அதாவது ஒரு வெள்ளிக்கிழமை நாளில் மேக்னீஷோவாக இந்த படம் வெளியிடப்பட்டதாம். படத்தைப் பார்த்து அனைவரும் பேய் படம் என்று பயந்து பாதியிலேயே ஓடிவிட்டார்களாம்.
ஆனால் இது பேய் படம் இல்லை. எப்படியாவது ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தாணு ஒரு செயலை செய்திருக்கிறார். அப்பொழுதெல்லாம் வெள்ளிக்கிழமைகளில் தூர்தர்ஷனில் ஒளியும் ஒலியும் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். அந்த நிகழ்ச்சியை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.
அப்போது தாணு தூர்தர்ஷனிற்கு சென்று 2500 ரூபாயை கொடுத்துவிட்டு இந்த யார் படத்தில் கிளைமாக்ஸ் இல் ஒரு சாமி பாடல் இடம்பெருமாம். அந்தப் பாடலை ஒளிபரப்ப சொல்லி அதை மக்கள் பார்த்தால் ஆவது இது பேய் படம் இல்லை என்று தியேட்டருக்கு வருவார்கள் என்று நினைத்து ஒளிபரப்ப சொல்லி இருக்கிறார். இதை அந்த பேட்டியில் தெரிவித்தார் கலைப்புலி எஸ் தானு.