சிவாஜி வாழ்க்கையில் இருந்து ஆட்டைய போட்ட முதல்வன் கதை… இத்தனை சீக்ரெட் விஷயம் இருக்கா?

by Akhilan |
சிவாஜி வாழ்க்கையில் இருந்து ஆட்டைய போட்ட முதல்வன் கதை… இத்தனை சீக்ரெட் விஷயம் இருக்கா?
X

Mudhalvan: தமிழ் சினிமாவின் வரலாற்றில் அரசியல் திரைப்படங்களின் பாதைச் சென்றுக்கொண்டே இருக்கிறது. அமைதிப்படை எவ்வாறு ஒரு தீவிர அரசியல் திரைப்படத்திற்கு மைல்கல்லாக அமைந்ததோ, அதேபோல், முதல்வன் ஒரு கமர்ஷியல் அரசியல் திரைக்கதைக்கு முன்னோடியாக அமைந்தது.

பிரம்மாண்டத்திற்கு, சமூக சிந்தனைக்கும் பாலமாக இருந்த இயக்குநர் ஷங்கர், எப்போதுமே புதுமையில் நம்பிக்கை வைத்தவர். ஜீன்ஸ் படத்திற்கு பிறகு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் மூலமாக எடுத்த முதல் படம் முதல்வன்.

வெறும் பொழுதுபோக்குக்காக அல்லாமல், சிந்திக்க வைக்கும் ஒரு அரசியல் கற்பனைதான் இப்படத்தின் மையம். ஒரு சாதாரண தொலைக்காட்சி கேமராமேன், திடீரென ஒரு நாள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் சூழ்நிலை.

இந்த வித்தியாசமான யோசனைக்கு, 1977ம் ஆண்டு ஒளிபரப்பான நிக்சன்-ஃப்ரோஸ்ட் எனும் புகழ்பெற்ற நேர்காணலே துவக்கமாக அமைந்ததாம். அதில், ஒரு பத்திரிகையாளர் அமெரிக்க அதிபருக்கு சவால் விடும் விவாதம் இருக்க அதையே முதல்வன் படமாக மாற்றினார் சங்கர்.

மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அமெரிக்காவின் நயாகரா ஃபால்ஸ் நகரில் ஒரு நாள் கௌரவ மேயராக நியமிக்கப்பட்டிருந்த சம்பவமும், படத்துக்கு உதவியாக அமைந்தது. அர்ஜூன் நடித்த புகழேந்தி கேரக்டர் இன்றளவும் வைரலாக இருக்கிறது.

படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினிகாந்த் சிந்திக்கப்பட்டாலும், அவர் படத்தில் இருந்து விலகினார். பின்னர் விஜய் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பிஸியாக இருந்ததால், வாய்ப்பு அர்ஜூன் பக்கம் வந்து சேர்ந்தது.

ஜென்டில்மேன் பட அனுபவத்தால் ஷங்கருக்கு ஏற்கனவே பரிச்சயமான அர்ஜூன், இந்த வேடத்துக்கு 100% கமிட்டாகி நடித்தார். அர்ஜூனும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

முதலில் மீனா கதாநாயகியாக இருக்க வேண்டுமென ஷங்கர் ஆசைப்பட்டாலும், அவர் ரிதம் பட வேலைகளில் அர்ஜூனுடன் நடித்து வந்ததால், மனிஷா கொய்ராலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், லைலாவின் பாத்திரமும் ஆரம்பத்தில் முக்கியமாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்சனைகளால், அந்த கேரக்டர் குறைக்கப்பட்டது. இப்படி, கதாபாத்திரத் தேர்வு முதல் அரசியல் கரு வரை முதல்வன் ஒரு மாஸ் பொலிட்டிகல் படத்தின் ஸ்டாண்டர்டாக மாறியது.

சமூக மாற்றத்துக்கான ஒரு கற்பனை வித்தையை, விறுவிறுப்பான திரைக்கதையில் கொடுத்து, தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஜானரில் புதிய சாயலை ஏற்படுத்திய படம் இது என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.

Next Story