---Advertisement---

Arjun: 29 வயதில் அர்ஜூன் சந்தித்த பிரச்சினைகள்! கை கொடுத்து தூக்கிய மாஸ் ஹிட் படம்

Published on: February 10, 2026
---Advertisement---

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஆக்‌ஷன் கிங் என்றாலே அது நடிகர் அர்ஜூன் மட்டும்தான். இந்தப் பட்டத்துக்கு சரியாக பொருந்த கூடிய ஒரே நடிகரும் இவரும். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஆக்‌ஷன் கதைகளை சார்ந்தே தான் வெளியாகியிருக்கின்றன. ஆரம்பத்தில் சில சருக்கல்களை இவர் சந்தித்தாலும் 90களுக்கு பிறகு இவர் நடித்த பெரும்பாலான படங்கள் மக்களை திருப்திபடுத்தியது என்றே சொல்லலாம்.

அதுமட்டுமில்லாமல் தேசப்பற்று மிக்க வசனங்களும் இவர் படத்தில் அதிகமாகவே இருக்கும். பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களிலேயே இவர் நடித்துள்ளார். இவருடைய பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அர்ஜூனுக்கு போலீஸாக வேண்டும் என்றுதான் விருப்பமாம். ஆனால் அவருடைய அப்பாவுக்கோ தன் மகனை மருத்துவராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார்.

போலீஸ் ஆக வேண்டும் என்பதற்காகத்தான் மார்ஷியல் ஆர்ட்ஸ், கராத்தே என பல கலைகளை அர்ஜூன் கற்றுள்ளார்.சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிறந்ததால்தான் என்னவோ நாட்டுப்பற்று மிக்கவராக அர்ஜூன் இருக்கிறார். திரைத்துறையில் நெருங்கிய நண்பர்கள் என யாருமே அர்ஜூனுக்கு கிடையாதாம். ஜெகபதிபாபு மட்டும்தான் இவருடைய ஒரே நண்பராம்.

தொடர்ந்து 5 படங்கள் தோல்வியை கொடுத்த நேரத்தில் சேவகன் திரைப்படம்தான் அர்ஜூனுக்கு ஒரு பிரேக் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் அந்தப் படமும் அவருக்கு தோல்வியைத்தான் தந்தது. அதனால் வினியோகஸ்தர்கள் படத்தை வாங்கவோ விற்கவோ யாரும் முன்வரவில்லையாம்.

அந்த நேரத்தில் அர்ஜுனுக்கு 29 வயதாம். ஒரு இயக்குனராகவும் இருந்திருக்கிறார். சேவகன் திரைப்படம் முழுமையான தோல்வி படமாக அமைந்திருந்தால் கண்டிப்பாக அர்ஜூன் பெங்களூருக்கு ரிட்டர்ன் ஆயிருப்பாராம். ஏனெனில் இருந்த எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டாராம். அந்த நேரத்தில்தான் அவருக்கு ஜென்டில்மேன் படம் பெரிய அளவில் கைக் கொடுத்திருக்கிறது.

இருந்தாலும் எல்லா வகையான ஜானரிலும் படங்களில் நடிக்க அர்ஜுன் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஆக்‌ஷன் படங்கள்தான் அவரை பெரிய அளவில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது. அதனால்தான் ஆக்‌ஷன் ஹீரோவாக இன்று வரை ஜொலித்து வருகிறார் அர்ஜூன்.