மொத்த கதையையும் மாற்றி காலி செய்த அர்ஜூன்... தலையில் துண்டை போட்ட இயக்குனர்....
பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு கதையை தயார் செய்வார். அதை தயாரிப்பாளரிடம் கூறி சம்மதம் பெற்ற பின், அந்த கதைக்கான ஹீரோக்களை தேடி செல்வார்கள். இது ஒரு புறம் எனில், ஒரு நடிகர் கதையை இயக்குனரிடம் கேட்டபின் நடிக்க சம்மதிப்பார். அதன்பின் தன்னுடைய ரசிகர்கள் விரும்பும்படியான காட்சிகளை உள்ளே வைக்க சொல்லி இயக்குனரை கதற வைப்பார்.
சினிமா 60களில் தயாரிப்பாளர்கள் கையில் இருந்தது. 80களில் இயக்குனர்கள் கையில் இருந்தது. 90க்கு பின் மெல்ல மெல்ல சினிமா ஹீரோக்களின் கையில் சிக்கியதன் விளைவுதான் இது. ரஜினி ஒரு படத்தில் நடிக்கிறார் தனது ரசிகர்களுக்கு பிடிக்கும்படியான காட்சிகள் மற்றும் வசனங்களை அவர் வைக்க தவறுவதில்லை. தற்போது விஜயும் கூட அந்த பட்டியலில்தான் இருக்கிறார்.
சில சமயம் மாற்றம் சொல்கிறேன் என்கிற பெயரில் இயக்குனர் கூறிய மொத்த கதையையுமே ஹீரோ மாற்றிவிடுவார். இதனால் படமும் தோல்வி அடைவதோடு, அந்த இயக்குனரின் எதிர்காலமும் பாழாகிவிடும். இப்படி ஒரு சம்பவம் செங்கோட்டை படத்தை இயக்கிய சி.வி.சசிக்குமாருக்கு நடந்துள்ளது.
சி.வி.சசிக்குமார் ஒரு கதையை உருவாக்கி அதற்கு கருணை மனு என பெயர் வைத்தார். அந்த கதையை அப்போது பல படங்களை தயாரித்து வந்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியை சந்தித்து அந்த கதையை கூறினார். அந்த கதை சௌத்ரிக்கு மிகவும் பிடித்துப்போக, இது வரை நான் செய்யாத செலவை இந்த படத்திற்கு செய்கிறேன் எனக்கூறி அப்படம் துவங்கியது. ஹீரோ அர்ஜூன் என முடிவானது.
படத்தின் கதை விவாதங்களில் கலந்து கொண்ட அர்ஜூன் தனது வேலையை காட்ட துவங்கினார். அப்போது அவருக்கு நாட்டுப்பற்று மிகவும் அதிகமாக இருந்த காலம் ஆகும். எனவே, காட்சிகளை மாற்றி மாற்றி இறுதியில் மொத்த கதையும் மாறிப்போனது. படத்திற்கு டைட்டில் செங்கோட்டை என மாறிப்போனது. பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, படம் தோல்வி அடைந்தது. இதனால், பல லட்சம் நஷ்டத்தில் முடிந்தது அப்படம்.
செங்கோட்டை படம் அர்ஜூன், மீனா, ரம்பா ஆகியோர் நடித்து 1996ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் இயக்குனருக்கு அதன்பின் படம் கிடைக்கவே இல்லை. சில மாதங்களுக்கு முன் அவர் இறந்துஇபோனது குறிப்பிடத்தக்கது.