தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகர்களில் யோகிபாபுவும் ஒருவர். நகைச்சுவை வேடங்கள் மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது 300வது படமாக அர்ஜூனன் பேர் பத்து நடித்து வருகிறார்.
அர்ஜுனன் பேர் பத்து வழக்கமான காமெடிப் படமாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட ஒரு யதார்த்தமான கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பழைய வாகனங்களை விற்பனை செய்வதில் நடக்கும் மோசடிகள், அதனால் சாமானிய மக்கள் படும் வலிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளர்.
இந்த நிலையில் இபடத்தின் டீஸர் இன்று வெளியனது. ஒரு வண்டிக்கு நான்கு பேர் உரிமை கொண்டடுவதாக அந்த டீஸரில் காட்சிகள் உள்ளது. இது படத்த்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.





