அகம்பாவம் கொண்ட பெண்களைப் பற்றிய படங்கள்...! இவரு நடிச்சதுதான் ரொம்பவே விசேஷம்..!

by sankaran v |   ( Updated:2022-11-13 18:01:51  )
அகம்பாவம் கொண்ட பெண்களைப் பற்றிய படங்கள்...!  இவரு நடிச்சதுதான் ரொம்பவே விசேஷம்..!
X

Vijayasanthi, Rajni in Mannan

பெண்கள் அடக்கமாகவும் அதே நேரம் அறிவில் சிறந்தவர்களாகவும் திகழ வேண்டும். அப்படிப்பட்ட பெண்களைத் தான் எத்தகைய ஆண்களுமே விரும்புவர். திமிராகவும், ஆணவமாகவும் பேசும் பெண்களுக்கு சமுதாயத்தில் ஏதோ ஒரு வகையில் மதிப்பு இருந்தாலும் அது நிரந்தரமல்ல.

பணத்திற்குத் தான் மதிப்பே தவிர, அவருக்கு இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய பெண்களை தமிழ்சினிமாவில் குறிப்பாக ரஜினி படங்களில் பார்க்கலாம். அவற்றில் சில படங்களை இங்கு பார்ப்போம்.

தனிக்காட்டு ராஜா

Thanikattu raja Rajni, Sridevi

வி.சி.குகநாதன் இயக்கத்தில் 1982ல் வெளியான படம். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா, ஜெய்சங்கர், விஜயகுமார், ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படத்தில் ஆரம்பக்கட்டத்தில் கொஞ்சம் திமிராக பேசும் நாயகி ரஜினியிடம் சரணடைகிறார்.

அந்தப்பாடல் தான் நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்பு என்ற பாடல். இருவருக்கும் போட்டி செமயாக இருக்கும். இளையராஜாவின் இன்னிசையில் சந்தனக்காற்றே பாடல் தாலாட்டும் ரகம்.

தங்கமகன்

Thangamagan poomalai song

ஏ.ஜெகன்னாதன் இயக்கிய படம். 1983ல் வெளியானது. ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம், ஜெய்சங்கர், தேங்காய்சீனிவாசன், சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதம். குறிப்பாக ராத்திரியில் பூத்திருக்கும் பாடலும், அடுக்கு மல்லிகை பாடலும் ரசனைக்கு விருந்து.

தங்கமகன் படத்தில் ரஜினிகாந்த், பூர்ணிமாவிற்கு இடையில் போட்டி நடனம் வரும். பூமாலை என்ற பாடலில் இருவரும் போட்டி போட்டு ஆடுவர். கடைசியில் ஒவ்வொரு டிரஸ்சாக ரஜினிகாந்த் கழட்டி போட்ட படி ஆடுவார். பூர்ணிமாவும் அதேபோல் ஒவ்வொரு டிரஸ்சாக கழட்டிவிட்டபடி ஆடுவார்.

பாடலின் முடிவில் ரஜினிகாந்த் கடைசி சட்டையையும் கழட்டி வெற்று உடம்பில் ஆடுவார். ஆனால் பூர்ணிமாவால் அப்படி ஆட முடியாமல் தோற்றுவிடுவார். இது படத்திற்காகத் தான் என்றாலும் ஆண்களால் செய்ய முடிந்த சில காரியங்களைப் பெண்களால் செய்ய முடியாது என்பதையே எடுத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மன்னன்

பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் மன்னன். இந்தப்படத்தில் ரஜினிகாந்த், விஜயசாந்தி, பிரபு, குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். நாயகனின் மனைவி முதலாளி. கணவனோ தொழிற்சங்க தலைவர். வீம்பிற்காக திருமணம் செய்து கொள்ளும் நாயகி, நாயகனை பலவிதங்களில் பழிவாங்குகிறாள். அவமானப்படுத்துகிறாள்.

இறுதியில் மனைவியின் மானத்தையும் கற்பையும் காப்பாற்றி ஆண் மேலானவன். பெண் அவளுக்குக் கீழானவள் என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் நச்சென்று சொல்கிறது படம். பெண்ணானவள் கர்வமும், அகம்பாவமும் கொள்ளக்கூடாது என்பதையும் படம் வலியுறுத்துகிறது.

படையப்பா

Padayappa

1999ல் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியானது படையப்பா. ரஜினிகாந்த், சிவாஜிகணேசன், ரம்யாகிருஷ்ணன், சௌந்தர்யா, செந்தில், ரமேஷ் கண்ணா, மணிவண்ணன், வடிவுக்கரசி உள்பட பலர் நடித்துள்ளனர்.

நாயகனைக் காதலிக்கும் பெண் தன் எஜமானியின் பயத்தால் காதலை வெளிப்படுத்தத் தயங்குகிறாள். அதேநேரம் எஜமானியும் நாயகனை வெறித்தனமாகக் காதலிக்கிறாள். நாயகனுடன் அவ்வப்போது ஆணவம் கொண்டு திமிராகப் பேசுகிறாள்.

இறுதியில் நாயகனுக்கும் காதலிக்கும் திருமணம் நடக்கிறது. எஜமானி என்ன ஆனார் என்பதே கதை. நீலாம்பரியாக வரும் ரம்யாகிருஷ்ணன் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.

ரஜினியுடன் போட்டி போட்டுக்கொண்டு படத்தில் ஸ்டைல் காட்டி அசத்தியிருப்பார். குறிப்பாக ரஜினிக்கு இருக்கை இன்றி பேச வரவழைக்கும்போது ரஜினி தன் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து தூக்கிப் போட்டு தலைக்கு மேல் தொங்கும் ஊஞ்சலை லாவகமாக அவிழ்த்து அநாயசமாக அதில் ஏறி கால் மேல் கால் போட்டு ஸ்டைலாகப் பேசும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. பொம்பளன்னா எப்படி இருக்கணும்னு ரஜினி பேசும் வசனத்தில் ஒரு பாடமே அடங்கியுள்ளது.

Next Story