நடிகைகளை அசிங்கமா பேசுறாரு… அந்த யூடியூபர் கைது பண்ணுங்க… ரோகிணி புகார்…

by Akhilan |   ( Updated:2024-09-14 06:21:58  )
நடிகைகளை அசிங்கமா பேசுறாரு… அந்த யூடியூபர் கைது பண்ணுங்க… ரோகிணி புகார்…
X

ரோகிணி

Rohini: பிரபல நடிகை ரோகிணி நடிகைகளை யூடியூபில் அவதூறாக பேசி வரும் யூடியூப் வரை கைது செய்ய வேண்டும் என கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்பெல்லாம் திரைப்படங்கள் குறித்து செய்தித்தாள்களில் தான் அதிகமாக வரும். தற்போது டிஜிட்டல் மயமான பின்னர் ஆன்லைன் தளங்களும், யூடியூப் வீடியோக்களும் அதிகம் ஆகிவிட்டது. பலர் ரிவியூகள் என்ற பெயரில் சினிமா குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித் வாங்கிய ஆடம்பர ரேஸ் கார்… 3 நொடியில் 100 கி.மீ. வேகம்… எத்தனை கோடி தெரியுமா…?

அதிலும் ஹேமா கமிட்டி அறிக்கைக்கு பின்னர் தற்போது எல்லாம் மொழிகளிலும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பேச்சு தான் அடிபட்டு வருகிறது. அது குறித்து பிரபல திரை விமர்சகர்கள் தங்களுக்கு தெரிந்த விஷயங்களை தொடர்ந்து வீடியோக்களாக பதிவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை ரோகிணி புகார் ஒன்றை தெரிவித்து கொள்கிறார்.

kantharaj

அந்த பதிவில், டாக்டர் காந்தராஜ் கடந்த மாதம் வீடியோ ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் நடிகைகள் எல்லாம் தெரிந்து கொண்டுதான் நடிக்க தொடங்குகின்றனர். அதற்கு சம்மதமும் தெரிவிக்கின்றனர். ஆனால் எல்லாம் முடிந்த பின்னர் பல ஆண்டுகள் கழித்து நடிகர்கள் மீது குற்றத்தை சுமட்டுவதாக பேசி இருந்தார். இப்படி சினிமா நடிகைகளை பாலியல் தொழிலாளி போல சித்தரித்து பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க: என்னய்யா கடைசியில் இப்படி பண்ணிட்டீங்க… ஏமாந்த விஜய் ரசிகர்கள்… தளபதி 69 படத்தின் அப்டேட்..?

அவர் பேசியிருப்பது சினிமாவில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு இவர் பேசுவது தவறான வழிகாட்டுதலாக அமையும். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். சினிமாவில் நடிகைகள் மீதான பாலியல் அவதூறுகள் அதிகரித்து வருகிறது.

மலையாளத்தை போல தமிழிலும் இது போல் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தலைவராக நடிகை ரோகிணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த கமிட்டியால் சில நாட்களுக்கு முன்னர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பிரபலங்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் நடிக்க தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story