---Advertisement---

ஒரு ஆணுடன் ஒரே கலரில் உடை அணிந்து சென்றால்…ஆர்த்தி பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி

Published on: March 13, 2026
ravimohan arthi
---Advertisement---

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவரது மனைவி ஆர்த்தி. இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. ஆர்த்தியுடன் ஏற்பட்ட மனகசப்பை அடுத்து ரவி மோகன் விவாகரத்து கேட்டு நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார். இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்தாலும் ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ரவியின் பெயரை நீக்காமல் வைத்துள்ளார்.

ஆர்த்தியுடன் ஏற்பட்ட பிரிவை அடுத்து கடந்த ஆண்டு ஐசரி கணேஷ் வீட்டு விழாவிற்கு ரவி மோகன் கெனிசாவை அழைத்து வந்தார். இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்தனர். அந்த சம்பவம் பெரும் ப்ர்ப்ர்ப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டுகொள்ளாத இருவரும் பல இட்ங்களுக்கு ஜோடியாக சென்றனர்.

இரு தினங்களுக்கு ரவி மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு நாள் உங்களுக்கு என்னை புரியும். தயவு செய்து வாழ விடுங்க என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலர், சார் தயவு செய்து குடும்பத்துடன் சேர்ந்து வாழுங்கள், ஆர்த்தி மற்றும் உங்கள் மகன்கள் தான் எது நடந்தாலும் கடைசி வரை உங்களுடன் இருப்பார்கள் என்று கமெண்ட் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஆர்த்தி இன்ஸ்டாவில் ஒருவர் போட்ட போஸ்ட்டை தன் ஸ்டோரியாக போட்டு, நேர்மைக்காக குரல் கொடுப்பவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். அவ்ர் ஷேர் செய்துள்ள அந்த ஸ்டோரியில்

விவாகரத்து உறுதியாவதற்கு முன்பு ஆர்த்தி ஒரு ஆணுடன் ஒரே கலரில் உடை அணிந்து வெளியே சென்றால் இந்த உலகம் அதை பார்த்து அமைதியாக இருக்குமா? அதை எல்லாம் செய்த பிறகு, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆர்த்தி சொன்னால் அதை ஏற்க முடியுமா? அதனால் அப்படி செய்துவிட்டு பாதிக்கப்பட்டவன் என்று சொல்லும் ஆண்களை நாங்களும் கை காட்டுவோம். இது கொடூரமான செய்கை என்று பதிவிட்டிருந்தது.