ஓயாம அடுத்த பாகம் எடுக்க முடியுமா? யாரங்க அருள்நிதி சொல்றீங்க...
தற்போது கோலிவுட்டில் இரண்டாம் பாகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹிட் அடித்த திரைப்படங்களின் பெயரில் தனியாகவோ அல்லது தொடர்ச்சியை வைத்தோம் வரிசையாக படங்கள் வெளிவருகிறது. ஆனால் நிறைய படங்கள் தோல்வியை மட்டுமே தழுவி வருகிறது.
இதையும் படிங்க: கமல் ஹோஸ்ட் பண்ணத நான் பண்ண மாட்டேன்! பிக்பாஸ் நிகழ்ச்சியை நிராகரித்த நடிகர்
கோலிவுட் வரலாற்று சாதனை படைத்த இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டாக அமைந்தது. 90களில் வெளியான இப்படம் அப்போதைய கோலிவுட் சினிமா வரலாற்றில் அசைக்க முடியாத வசூலை குவித்திருந்தது. ஆனால் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அருள்நிதி நடிப்பில் வெளியான டிமான்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய இடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ப்ரமோஷன் வேலைகள் தொடங்கி நடந்து வருகிறது. முதல் பாகத்தை போல இரண்டாம் பாகம் பெரிய அளவில் வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் அருள்நிதி பேசும்போது, முதலில் டிமான்டி காலனி படத்தை அஜய் ஞானமுத்து இயக்குவதாக முடிவாகவில்லை. அவர் கதை மட்டுமே எழுதிக் கொடுத்தார். அவருடைய நண்பர் வெங்கிதான் அந்த படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதை மீது இருந்த நம்பிக்கையால் அஜய் ஞானமுத்து தான் இயக்க வேண்டும் என கூறி வெளியேறினார்.
மேலும், டிமான்டி காலனி திரைப்படத்தின் நான்கு பாகங்களுக்கு கூட கதை தயாராக இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாகத்தின் வெற்றியை பொருத்துதான் மூன்றாம் பாகம் எடுக்கலாமா? வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்போம். கதை இருப்பதற்காக எடுத்துவிட முடியாதே? மேலும், முதல் பாகத்தை இரண்டாம் பாகத்துடன் சரியாக இணைத்து திரைக்கதையை அமைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் நடிப்பைப் பார்த்து மிரண்டு போன நடிகர் திலகம்..! பதுங்கினால் பூனை… பாய்ந்தால் புலி !
கோலிவுட்டில் தற்போதைய இரண்டாம் பாகம் மோகத்திற்கு டிமான்டி காலனி பலியாகுமா இல்லை வெற்றிப்பாதையை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் அருள்நிதி பேசியது ரசிகர்கள் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவே இருந்ததாகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.