ஸ்பென்சர் பிளாசாவுக்குள் கோமாளி போல் நுழைந்த அருள்நிதி… இப்படி ஒரு டெடிகேஷனா??

Arulnithi
தமிழில் வித்தியாசமான கதைக்களமாக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிப்பவர்களில் அருள்நிதியும் ஒருவர். குறிப்பாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்”, “டி பிளாக்”, “தேஜாவு”, “டைரி” போன்ற பல திரில்லர் திரைப்படங்களில் சமீப காலமாக அருள்நிதி நடித்து வந்தார். தனித்துவமான கதையம்சத்தை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாது, அத்திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பையும் வெளிப்படுத்திவருகிறார் அருள்நிதி.

Arulnithi
அருள்நிதி “வம்சம்” திரைப்படத்தின் மூலம்தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியக்க வைத்தார். மேலும் “வம்சம்” திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அருள்நிதி, தனது முதல் திரைப்படமான “வம்சம்” திரைப்படத்தை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

Arulnithi
“வம்சம் திரைப்படம் உருவாவதற்கு முன்பு இயக்குனர் பாண்டிராஜ், கூத்துப்பட்டறையில் இருந்த விஜயன் என்ற நபரை எனக்கு நடிப்பு பயிற்சி அளிப்பதற்காக நியமித்திருந்தார்.
பயிற்சியின் முதல் விஷயமாக விஜயன் முதலில் என்னை கண்ணை மூடிக்கொண்டு மூச்சுப்பயிற்சி செய்ய சொன்னார். அப்போது திடீரென அவர் ஒரு கண்ணாடி பாட்டிலை உடைத்தார். நான் அதிர்ச்சியில் கண்ணை திறந்து பார்த்தேன். ‘நீங்கள் ஏன் கண்ணை திறக்கிறீர்கள். உங்களை மூச்சி பயிற்சித்தானே செய்ய சொன்னேன். என்ன நடந்தாலும் உங்களது கவனத்தை சிதறவிடாதீர்கள்” என கூறி, இது போன்ற பல பயிற்சிகளை எனக்கு கொடுத்தார்” என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க: லொள்ளு சபா குழுவினரை மிரட்டிய எஸ்.ஏ.சி!! தளபதிக்கு ஐஸ் வைத்த விஜய் டிவி… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

Arulnithi
மேலும் பேசிய அருள்நிதி “ஒரு நாள் விஜயன், கலர் பெயின்ட்டுகளை வாங்கி என் முகத்தில் தேய்த்துவிட்டு, சென்னை ஸ்பென்சர் பிளாசாவிற்குள் அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு உள்ளவர்கள் அனைவரும் என்னை ஒரு மாதிரி பார்த்தனர். மேலும் யார் என்னிடம் வந்து பேசினாலும் அவர்களிடம் “சாப்பிட்டீங்களா?” என்றுதான் கேட்கவேண்டும், வேறு எதுவும் பேசக்கூடாது என ஒரு விதிமுறையையும் விதித்திருந்தார் விஜயன். எனினும் நான் சில நிமிடங்களிலேயே ஸ்பென்சர் பிளாசாவை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டேன்” என மிகவும் கலகலப்பாக தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
எனினும் “விஜயனின் பயிற்சிதான் கேமரா முன் தைரியமாக என்னை நடிக்க வைத்தது. எனது கூச்சத்தையும் போக்கியது” என அருள்நிதி அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.