‘அருள்வான்’ படத்துக்கு பிறகு அருள்நிதி நடித்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் ‘டிமான்ட்டி காலனி 3’.
அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதையடுத்து அருள்நிதி ‘பம்பர்’ இயக்குநர் எம்.செல்வக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இந்த படத்துக்கு ‘வேட்ட சாமி’ என டைட்டில் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் GLIMPSE-ஐயும் ரிலீஸ் செய்துள்ளனர்.
இதில் முக்கிய வேடத்தில் இயக்குநர் அமீர் நடிக்கிறார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.







