பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. ‘காஞ்சனா’வை ஓரம் கட்ட நடிகரை டார்ச்சர் செய்யும் இயக்குனர்

by Rohini |   ( Updated:2023-07-26 06:49:40  )
lawrence
X

lawrence

ஒரு பக்கம் காதல்,சென்டிமென்ட் சண்டை காட்சிகள் என படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க இன்னொரு பக்கம் பிசாசு, பேய், ஆவி என ஒரு கதை களத்தோடு திரைப்படங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன. ஆவி, பேய் சம்பந்தமான பல படங்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன.

குறிப்பாக காஞ்சனா, அரண்மனை போன்ற படங்கள் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக வெளியிட்டு ரசிகர்களை நடுங்க வைத்தனர். இப்போது இந்த படங்களின் வரிசையில் அடுத்ததாக நடிகர் அருள்நிதி நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கின்றது டிமான்டி காலனி.

lawrence1

lawrence1

ஏற்கனவே டிமான்டி காலனி படத்தின் முதல் பாகம் வெளியாகி ஒரு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் தயாராகிக் கொண்டிருக்கின்றது. அருள்நிதி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் கொலை த்ரில்லர் கதைகளத்தோடு தொடர்புடையதாகவே வெளிவந்திருக்கின்றன.

இதையும் படிங்க : என்னது ‘வணங்கான்’ திரைப்படம் இந்தக் கதையா? இதுக்குப் போயா சூர்யாவை ஓட விட்டாரு?

இந்த டிமான்டி காலனி திரைப்படத்தின் மூலம் தான் அவரும் காஞ்சனா அரண்மனை போன்ற படங்களின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க அதன் இயக்குனரான அஜய் ஞானமுத்து கூடவே அதன் மூன்றாம் பாகம் நான்காம் பாகத்திற்கும் சேர்த்து கதையை தயார் செய்து கொண்டு வருகிறாராம்.

lawrence2

lawrence2

சொல்லப்போனால் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கான சில முக்கிய விஷயத்தையும் அதில் இணைக்க இருக்கிறாராம். ஏற்கனவே காஞ்சனா 1 ,2 ,3 வெளியாகி சக்க போடு போட்டது. அதேபோல அரண்மனை படமும் இப்போது நான்காம் பாகத்தில் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இதைப் பற்றி கோடம்பாக்கத்தில் பேசுகையில் அருள் நிதியை ஒட்டுமொத்தமாக அஜய் ஞானமுத்து குத்தகைக்கு எடுத்திருக்கிறார் போல என பேசி வருகின்றனர் இருந்தாலும் டிமான்டி காலனி திரைப்படம் ஒரு நல்ல சீட்டை கொடுத்த திரைப்படம் அஜய் ஞானமுத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தால் காஞ்சனா அரண்மனை போன்ற படங்களின் ஹிட் வரிசையிலும் டிமான்டி காலனி திரைப்படமும் போய் நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Next Story