தனுஷ் நடிப்பில் அடுத்த படத்திற்கான பூஜையில் இயக்குனருக்கு ஏற்பட்ட அவமானம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் கேப்டன் மில்லர். இப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். வித்தியாசமான கதையமைப்பில் உருவாக இருக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அதில் தனுஷின் கேப்டன் மில்லர் என்று கூறப்பட்டு இருந்தது.
தமிழ் விடுதலை புலிகளில் ஒருவரான வல்லிப்புரம் வசந்தன். இவர் தான் முதல் ப்ளாக் டைகர் என அறிப்பட்டவர். தற்கொலை படையை தான் விடுதலை புலிகள் அவ்வாறு அழைத்து வந்தனர். வசந்தனை அக்குழு கேப்டன் மில்லர் எனக் கூறுவதே வழக்கம். இவரின் வாழ்க்கை தான் இப்படத்தின் கருவாக இருக்கும் எனக் கிசுகிசுக்கப்படுகிறது. இருந்தும் இந்த கதை தமிழ் சினிமாவிற்கு புது தான் என்பதால் படம் கண்டிப்பாக நல்ல வரவேற்பை பெரும் என இப்போதே நம்பப்படுகிறது.
அருண் மாதேஸ்வரன் பெயர் பூஜை பத்திரிக்கையில் இடம்பெறவில்லை. இது பலருக்கும் முகம் சுளிக்கும் வகையாக அமைந்துள்ளதாம். ஒரு இயக்குனரை எப்படி மறக்கலாம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், படத்தின் பூஜை நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்த பேனரில் அவரின் பெயரை நன்கு தெரியும்படி வைக்குமாறு தனுஷ் கூறியதாக தகவல்கள் கசிந்துள்ளன.
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியான படம் சாணிக்காகிதம். இப்படத்தினை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடிப்பில்…
சுதா கொங்கரா…
விஜயின் கடைசி…
நடிகர் விஜய்…
சுதா கொங்கரா…