டேய் உனக்கு வேற ஆளே கிடைக்கலயா..? வேண்டாம் விட்ரு… நயன் விஷயத்தில் பயந்த விக்கி…!

Published on: May 17, 2022
nayan_main_cine
---Advertisement---

‘ராக்கி’ மற்றும் ’சாணிக்காயிதம்’ போன்ற தரமான படங்களை தமிழி சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர்.

nayan1_cine

தன் முதல் படமான ராக்கி படத்தின் டிரெய்லர் மூலமே மக்கள் யார் இவர்? என கேட்கும் அளவிற்கு ஆர்வத்தை ஏற்படுத்தியவர். இந்த படத்தில் தரமணி ஹீரோ வசந்த் ரவி, ரோகிணி, பாரதிராஜா போன்றோர் நடித்திருந்தனர். ராக்கி’ படம் ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாகும். படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமும் முற்றிலும் வித்தியாசமாக படம் முழுக்க கொலைகளமாக காட்சியளிக்கும் கதையை சித்தரித்தார்.

nayan2_cine

கீர்த்திசுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக்காயிதம். ஒரு பெண்ணின் பழிவாங்கும் எண்ணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம். இந்த நிலையில் ராக்கி படம் ஆரம்பிக்கும் பொழுது முதலில் பெண்ணை மையமாக வைத்து அமையும் மாதிரியான கதையை தான் உருவாக்கினாராம். அதற்கு முதலில் நயன்தாராவை படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என எண்ணி விக்னேஷ் சிவனிடம் நயனிடம் பேச வைப்பதற்கு ஒரு வாய்ப்பு வேண்டும், என்னிடம் ஒரு நல்ல கதை இருக்கிறது அது அவர் பண்ணால் நன்றாக இருக்கும் என கூறினாராம். ஏற்கெனவே அருணும் விக்னேஷ் சிவனும் நண்பர்களாம்.

nayan3_cine

உடனே விக்னேஷ் சிவன் டேய் வேண்டாம் டா, பயந்துருவாங்க, வேற மாதிரி கொண்டுவந்துருவ அப்படினு அருணிடம் விக்கி கூறினாராம். ஏனெனில் அருண் மாதேஸ்வரனின் இரண்டு படங்களும் சரி அதற்கு முன் இவர் வொர்க் பண்ண படங்களும் சரி முற்றிலும் வித்தியாசமான க்ரைம் கதைகளம் கொண்டதாக பயங்கரமாக இருக்கும். அதனால் தான் நயனை வேண்டாம் என சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.ஆனாலும் அருண் விடாமல் நயனிடம் போய் கதையை சொல்ல நயன் தாராவுக்கும் பிடிச்சு போக படத்தை ஆரம்பிக்கலாம் என நினைக்கும் நேரத்தில் தயாரிப்பாளர் கிடைக்க படக்குழு திணறியதால் அந்த நேரத்தில் நயன் தாராவுக்கு ஏகப்பட்ட படங்கள் கைவசம் வைத்திருந்ததால் நடிக்க முடியவில்லையாம். அதன்பிறகு கொஞ்சம் கதைகளை மாற்றி ராக்கி படம் வசந்த் நடிப்பில் உருவானதாம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment