More
Categories: Cinema News latest news television

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ஹீரோவயே மாத்திட்டீங்களா? கடுப்பான பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சீரியல் அனைத்து வயதினர் மத்தியிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் இந்த சீரியல் அந்த அளவிற்கு டிரோல் செய்யப்பட்டதுதான்.

மீம் கிரியேட்டர்களின் டிரோல் மெட்டீரியலாகவே இந்த சீரியல் இருந்து வருகிறது. இதில் நாயகனாக பாரதி என்ற கேரக்டரில் நடிகர் அருண் பிரசாத் நடித்து வருகிறார். தற்போது இவர் இந்த சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ரோஷினி, ஹீரோவின் தம்பியாக நடித்து வந்த அகிலன், அகிலனின் மனைவியாக நடித்து வந்த கண்மணி என முக்கியமான பல கேரக்டர்கள் அடுத்தடுத்து விலகியதால் டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியல் தாறுமாறாக அடியானது.

இந்நிலையில் தற்போது ஹீரோவே மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி அருண் பிரசாத் தற்போது சினிமாவில் முழுமூச்சாக இறங்க இருப்பதால் சீரியலில் இருந்து விலகுவதாகவும், அவருக்குப் பதில் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும் அருண் சீரியலைவிட்டு வெளியேறுகிறாரா என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்