Connect with us

Cinema News

வழக்கறிஞராக வரிந்துக்கட்டி நடித்துள்ள ஜெய்!.. அருண்ராஜா காமராஜின் லேபில் வெப்சீரிஸ் விமர்சனம் இதோ!..

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், இளவரசு, சரண்ராஜ், மாஸ்டர் மகேந்திரன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லேபில் வெப்சீரிஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி வெளியானது.

மொத்த எபிசோடுகளும் வெளியாகாமல் முதல் 3 எபிசோடுகளை இந்த வாரம் வெளியிட்டுள்ளனர். வடசென்னை ஏரியாவை சுற்றி நடக்கும் இன்னொரு ரவுடிசம் சம்பந்தமான படம். அதில், அங்குள்ள அனைவரும் ரவுடிகள் இல்லை என்றும் ஒரு சின்ன க்ரூப்பால் மொத்த வடசென்னைக்கும் ஏற்படும் அவப்பெயரை கோடிட்டு காட்டி உள்ள அருண்ராஜா காமராஜ் அந்த லேபிலை மாற்ற அங்குள்ள ஒரு நாயகனே முயற்சி செய்தால் எப்படி இருக்கும் என்கிற வலுவான திரைக்கதையை எழுதி இயக்கி உள்ளார்.

   

இதையும் படிங்க: ஒரு வழியா பிரதீப் ரங்கநாதன் படத்தை ஆரம்பிக்கும் நயன்தாரா கணவர்!.. அந்த ஹிட் ஸ்டாரும் இணைந்துள்ளாராம்!..

நடிகர் ஜெய்க்கு சினிமாவில் பெரிதாக படங்கள் ஓடாத நிலையில், சில வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். அவர் நடித்ததில் உருப்படியான ஒன்றாக லேபில் மாறி உள்ளது. அடுத்து கோபி நயினார் இயக்கத்தில் கருப்பர் நகரம் படத்திலும் ஜெய் நடித்துள்ளார்.

ஜாலியான டபுள் மீனிங், சரக்கடிக்கும் லவ்வர் பாயாக நடித்து வந்த ஜெய் தற்போது தான் சினிமாவை புரிந்துக் கொண்டு கஷ்டப்பட்டு நடித்தால் தான் இங்கே நிலைக்க முடியும் என்பதை உணர்ந்திருக்கிறார் என தெரிகிறது.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் தளபதியை முந்திய உலகநாயகன்!.. இது எப்போ நடந்துச்சுன்னு தெரியுமா?..

ஜெய்யை தொடர்ந்து மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் குட்டி பவானியாக நடித்ததன் பிறகு எங்கே ஆளே காணோம் என தேடிய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பக்கா வடசென்னை பையனாகவே நடித்து மிரட்டி எடுத்துள்ளார்.

அதிலும், ஸ்கெட்ச் போட்டு பாதாளம் என்பவரை 3வது எபிசோட் கடைசியில் சம்பவம் பண்ணும் காட்சிகளிலும், டாஸ்மாக்கில் தன்னை யாருமே மதிக்காமல் போக வரும் வெறி என ஒவ்வொரு இடத்திலும் ஸ்க்ரீனில் காட்சிகளாக தெறிக்கிறது.

மீடியா நபராக வரும் தடம், தாராள பிரபு படங்களில் நடித்த நடிகை தான்யா ஹோப் இந்த படத்தில் ஆரம்பத்தில் வடசென்னையை தப்பாக காட்டுவது போன்ற நிகழ்ச்சியை நடத்த ஜெய் திட்டியதுமே வடசென்னை மக்களின் சந்தோஷமான வாழ்க்கையை படம் பிடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஷாப்பிங் போய் மொத்த கடையையும் அள்ளிய ருபீனா, ருபசீனா – வைரலாகும் வீடியோ!

ரொம்ப வருஷம் கழித்து சரண்ராஜ் இதில் ஜெய்யின் அப்பாவாக டெய்லர் வேடத்தில் செம சாதுவாக நடித்துள்ளார். இளவரசு, சுரேஷ் தாத்தா உள்ளிட்டோர்களின் நடிப்பும் கவனத்தை கவர்கிறது.

இந்த தீபாவளிக்கு தியேட்டரில் வந்த படங்களை பிடிக்கவில்லை என்றால் ஓடிடியில் லேபில் பார்க்கலாம். ஆனால், அதிகமான கெட்ட வார்த்தை இருப்பதால் வழக்கம்போல குடும்பத்துடன் பார்க்க முடியாது.

லேபில் – முத்திரை

ரேட்டிங் – 3.25/5.

google news
Continue Reading

More in Cinema News

To Top