பாலாவை நம்பி பிரயோஜனம் இல்லை!.. அந்த பிரிட்டிஷ் நடிகை படத்தை பொங்கலுக்கு களமிறக்கிய வாரிசு நடிகர்!..
அடுத்த ஆண்டு பொங்கல் ரேஸில் ரஜினிகாந்த் கேமியோவாக நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், பாலாவின் வணங்கான் மற்றும் சுந்தர். சியின் அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால், பொங்கல் போட்டி நெருங்க நெருங்க ஒவ்வொரு படமாக அந்த ரேஸில் இருந்து விலகி வருகிறது.
அரண்மனை 4, வணங்கான் படங்கள் ஏற்கனவே விலகியுள்ள நிலையில், லால் சலாம் மற்றும் அயலான் படங்களும் பொங்கலுக்கு வெளியாவதில் சந்தேகம் தான் எனக் கூறுகின்றனர். தனுஷின் கேப்டன் மில்லர் படம் மட்டுமே பொங்கலுக்கு சோலோ ரிலீஸாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய்சேதுபதியின் இந்தி படமான மெரி கிறிஸ்துமஸ் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அர்த்தமாயிந்தா ராஜா!.. விஜய் ஃபேன் தியேட்டர்லையே இப்படி கீழ இறக்கி உட்கார வச்சிட்டாரே சூப்பர்ஸ்டார்!
தமிழில் வேற எந்த படமும் பொங்கலுக்கு போட்டியில்லையா என்கிற கேள்வி நிலவி வந்த நிலையில், தற்போது அருண் விஜய் ஏ.எல். விஜய் இயக்கத்தில் எமி ஜாக்சன் உடன் இணைந்து நடித்த மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே படத்தை பொங்கலுக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆனால், இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். கடைசியாக 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அதன் பின்னர் தொழிலதிபரை நிச்சயம் செய்துக் கொண்டு அவருடன் வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டார். பின்னர் தொழிலதிபரை விட்டு பிரிந்த நடிகை தற்போது ஹாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: காலையில தான் லவ்வர்ன்னு அறிமுகப்படுத்திட்டு!.. இப்போ அசிங்க அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms