விடாமுயற்சி படத்தில் வில்லனாக பிரபல ஹீரோ?.. ஸ்கிரீன் கிழிய போகுது! சூடான அப்டேட்
விடாமுயற்சி படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு துணிவு படத்தில் நடித்து இருந்தார்.
பலத்த எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
துணிவு படத்தினை அடுத்து அஜித், விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
வரும் ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிழ் திருமேனி இயக்கிய தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திலும் வில்லனாக நடித்து அருண் விஜய் புகழ் பெற்றார். தற்போது 9 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் மீண்டும் அருண் விஜய் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி படத்தை அடுத்து நடிகர் அஜித் குமார், பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஏற்கனவே இந்தியா முழுவதும் பைக் சவாரி செய்த அஜித், நேபாளம் மற்றும் பூடான் நாடுகளையும் பைக் மூலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.