ஐய்யய்யோ என்னாச்சு?.. படுகாயங்களுடன் அருண்விஜய்!. வைரலாகும் புகைப்படம்!..
ஒரு ஹேண்ட்ஸம் ஹீரோவாக வலம் வருன் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் அருண்விஜய். தமிழ் சினிமாவில் முறை மாப்பிளை என்ற படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமானார். நடிகர் விஜயகுமாரின் மகன் என்றாலும் அந்த அதிகாரத்தை இவர் பயன்படுத்தவில்லை.
சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் இன்று ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். கிட்டத்தட்ட விஜய். அஜித் அறிமுகமான அதே காலத்தில் தான் அருண்விஜயும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.ஆனால் அவர்கள் அடைந்த வளர்ச்சியை சமீபத்தில் எட்டி வருகிறார் அருண்விஜய்.
இதயும் படிங்க :மீண்டும் கூட்டு சேரும் அந்த தோல்வி காம்போ… கச்சிதமாக கணக்கு போடும் சந்தானம்… ஒஹோ இதுதான் விஷயமா??
ஆனாலும் அந்த நடிகர் அந்தஸ்தை பெற இன்னும் விடாமுயற்சியை கடைபிடித்து வருகிறார். ஆனாலும் இவருக்கு என்று தனி ரசிகர்களே உள்ளனர். ஆரம்பத்தில் குலாப் ஜாமூன் மாதிரி கன்னத்துடன் பிரியம், கங்கா கௌரி, காத்திருந்த காதல், துள்ளித்திரிந்த காதல் போன்ற படங்களில் அமுல் பேபி மாதிரி இருந்திருப்பார்.
ஏதோ கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வந்த அருண்விஜய் பாண்டவர் பூமி படம் தான் அவரின் கெரியரில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அந்த படத்திற்கு பிறகு அவரின் வெற்றிப்படி கட்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. அதைதொடர்ந்து இயற்கை, தவம், மாஞ்சா வேலு போன்ற படங்களில் நடித்தார்.
எனினும் ஒரு இலக்கை அடைய முடியாமல் தவித்து வந்தார். அதன் பிறகு தான் ஜாக்பாட்டே அடித்தது. நல்ல கட்டுடனான உடம்புடன் வில்லன் கதாபாத்திரத்தில் என்னை அறிந்தால் படம் வாழ்க்கையையே திருப்பி போட்டது. அந்த படத்தில் அவரின் கட்டுமஸ்தான உடம்பை பார்த்து கோடம்பாக்கமே அதிர்ந்தது.
ஒரு அறிமுக நடிகர் போன்ற லுக்கில் அனைவரும் பார்த்து வியந்து போகிற அளவு ஆளே மாறிப்போய் இருந்தார் அருண்விஜய். அதன் பிறகு அவரின் வாசலில் வெற்றிக்கதவுகள் தான் தட்டியது. குற்றம் 23, தடையற தாக்க, செக்கச்சிவந்த வானம், சாஹோ, தமிழ் ராக்கர்ஸ் போன்ற படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக ஜொலித்தார்.
இதையும் படிங்க : ‘ பொன்னியின் செல்வன்’ பட நாயகியுடன் டேட்டிங் செய்யும் சமந்தா முன்னாள் கணவர்!.. அப்போ சீக்கிரம் டும் டும் தானா?..
இன்னும் கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் அருண்விஜய் தற்போது அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்னவெனில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட காயங்களா இல்லை படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்களா என்று தெரியவில்லை.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து திரைக்கு பின்னாடி இப்படி ஏகப்பட்ட காயங்களுடன் இன்னும் என் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார் அருண்விஜய்.