பொண்ணுங்க கிட்ட மாட்டுனா காலிதான்...! வீக் என்ட ஜாலியா என்ஜாய் பண்ணும் சார்மிங் ஹீரோ..
விஜயகுமார் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக நடித்து வந்தவர் அருண் விஜய், இவர் பல தடைகளை தாண்டி இப்போது ஒரு நல்ல இடத்தை பிடித்துள்ளார்.
நடனம், சண்டை பயிற்சி, அமெரிக்கா சென்று சினிமா படிப்பு கற்றது என்று அருண் விஜய்க்குப் பல திறமைகள் இருக்கின்றன. பாண்டவர் பூமி’, 'குற்றம் 23′ திரைப்படத்தில் பன்முக முத்திரை பதித்தாலும், இன்னும் தன் இருப்பைத் தக்கவைக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.
ஆரம்பகால படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய விடாமுயற்சியால் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தான் தன்னுடய திறமையை வெளிப்படுத்தினார். அதன்பின் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய ஸ்டைலான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில் காரில் படு ஸ்மார்ட்டாக டிரைவ் பண்ற மாதிரியான போஸில் உட்காந்து ரசிகர்களை மீட் பண்ணுவதாக கமென்ட் செய்துள்ளார்.