’ரோலக்ஸ்’ வித நான் போட்டது...! தலயும் சொன்னாரு...! வெளிப்படையாக கூறிய க்ரைம் நாயகன்...
தமிழ் சினிமாவில் க்ரைம் நாயகன் நடிகர் அருண்விஜய் என்றே சொல்லலாம். இவர் நடிக்கிற முக்கால் வாசி படங்கள் க்ரைம் கதையை அடிப்படையாக கொண்டே அமைகின்றன. குற்றம் 23, தடம் போன்ற படங்களில் இவர் நடித்த கதாபாத்திரங்கள் அந்த கால ஜெய்சங்கரை நியாபகப்படுத்துபவையாக இருந்தன.
இவர் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் படமான தமிழ் ராக்கர்ஸ் திரைப்படமும் க்ரைம் கதையம்சம் கொண்ட படமாக தான் இருக்க போகிறது. ஆரம்பத்தில் பல தோல்விகளை கண்டாலும் தமிழ் சினிமாவிற்கு விக்டர் கதாபாத்திரம் தான் இவருக்கும் மறுஜென்மம் எடுத்துக் கொடுத்தது.
என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும் போது அஜித் சாரே சொன்னாங்க நெகடிவ் ரோலில் நடித்தால் அதற்கு கிடைக்கிற மரியாதையே வேற என்று கூறினார் என்று அருண்விஜய் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை பற்றி கேட்கையில் இத அப்பவே நான் பண்ணிட்டேன். விக்டர் கதாபாத்திரம், தடம் படத்தில் பண்ண நெகடிவ் ரோல் என அப்பவே நான் பண்ணிட்டேன். இருந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரம் வெயிட்டான ரோல் தான். அதோட இரண்டாம் பாகத்தை பார்க்க உங்கள மாறி நானும் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார்.