அஜித் படத்தில் இவரை மட்டும் தான் ஃபோகஸ் பண்ணியிருக்கிறார் இயக்குனர்...! அப்போ அஜித்தின் கதி...?
படங்களையும் தாண்டி ஒருவரின் குணத்திற்காக ரசிகர்கள் சேர்ந்தார்கள் என்றால் அது தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்காக மட்டும் தான். அத்தனை ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவரின் சினிமா வாழ்க்கையில் இவர் சந்தித்த பிரச்சினைகளை பெரும்பாலும் வசனங்களாக சித்தரித்து படங்களின் மூலம் பிரதிபலிப்பார்.
அந்த வகையில் அமைந்த படங்களில் மிக முக்கிய படமான ’என்னை அறிந்தால்’ திரைப்படம். இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். மேலும் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து அட்டகாசமான தன் நடிப்பை வெளிப்படுத்தி பெருத்த வரவேற்பை பெற்ற படமாக அந்தாண்டு திகழ்ந்தது.
மேலும் இந்த படத்தின் மூலம் தான் நடிகர் அருண்விஜய்க்கு மறுவாழ்வு கிடைத்தது என்றே கூறலாம். பயங்கரமான தோற்றத்தில் வில்லனாக விக்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவரின் சமீபத்தில் வெளியான படம் யானை வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் அருண் விஜயிடம் என்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா? என நிரூபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கௌதம் சாரிடம் தான் கேட்க வேண்டும். மேலும் நானும் கௌதம் சாரும் சந்திக்கும் பொழுதெல்லாம் விக்டர் கதாபாத்திரத்தை மட்டும் தான் பேசியிருக்கோம் என கூற அப்போ விக்டர் பற்றிய கதையை மட்டும் எடுப்பாரா? என கேட்டனர். அதற்கு பதிலளித்த விஜய் எடுத்தால் நன்றாக இருக்கும். எனக்கும் என் கெரியரில் இன்னொரு அத்தியாயம் போல உணர்வேன் என கூறினார்.