நான் சினிமாவில் அறிமுகமான போதே அஜித் சார்!.. அருண் விஜய் சொன்ன ஆச்சர்ய தகவல்!...
Ajithkumar: சினிமாவில் வாரிசுகளுக்கு வாய்ப்பு கிடைப்பது சுலபம்தான். ஆனால், படங்கள் தொடர் வெற்றி பெற்றால் மட்டுமே நீடித்து நிற்க முடியும். அப்பாவால் அறிமுகமானாலும் நடிப்பு, நடனம், சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தொழிலில் உண்மையாக உழைக்க வேண்டும். கடின உழைப்பு இல்லையென்றால் சினிமாவில் சோபிக்க முடியாது. அப்பா இயக்குனர் என்பதால் வந்தவர்தான் விஜய். ஆனால், சினிமாவுக்கு அவர் அதிகமான உழைப்பை போட்டார் என சொல்வார்கள். துவக்கத்தில் அவரும் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…
‘இந்த மூஞ்செல்லாம் ஹீரோவா நடிக்குது’ என படப்பிடிப்பு தளத்தில் அவரின் காது படவே பேசுவார்களாம். வீட்டிற்கு போய் அம்மாவிடம் சொல்லி அழுவாராம். அப்போதெல்லாம் அவரின் அம்மா ஷோபாதான் அவருக்கு ஆறுதலும், நம்பிக்கையும் சொல்லி வந்திருக்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் விஜய் சினிமாவில் பிடித்த இடம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.
விஜய் சினிமாவில் அறிமுகமாகி 2 வருடங்கள் கழித்து வந்தவர்தான் அருண் விஜய். குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகனாக சினிமாவில் நுழைந்தார். அவரின் முதல் படமான ‘முறை மாப்பிள்ளை’ படத்தை இயக்கியவர் சுந்தர் சி. அதன்பின் பல வருடங்கள், பல படங்களில் நடித்தும் அவரால் முன்னணி நடிகராக மாறமுடியவில்லை.
இத்தனைக்கும் நடனம், சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடிப்பார். ஒருகட்டத்தில் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். அவரின் வேடம் முக்கியமானதாக இருக்க வேண்டும் என அஜித்தே சொல்ல அவருக்கு நிறைய காட்சிகள் வைக்கப்பட்டது. இப்படம் மூலமே அருண் விஜய் மீண்டும் பிரபலமாகி ஒரு ரவுண்டு வந்தார். இப்போதும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அருண் விஜய் ‘அஜித் சார் வான்மதி படத்தில் நடித்துகொண்டிருந்த போதுதான் நான் முறை மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானேன். அந்த படத்தில் நடித்த ஒரு நடிகர் அஜித்துடன் வான்மதி படத்தில் நடித்து வந்தார். அப்போது அவரிடம் ‘அருண் எப்படி நடிக்கிறார்’ என அஜித் என்னை பற்றி விசாரிப்பாராம். அப்போதிலிருந்தே அவருக்கு என் மீது அன்பும், அக்கறையும் இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: ‘இந்தியன் 2’ எடுக்கும் போது ஷங்கர் தூங்கிருப்பாரு! ரஜினி நண்பரே இப்படி சொல்லலாமா?