Connect with us

Cinema News

அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?

சினிமாவில் பல ஆண்டுகள் முன்பே அனைவருக்கும் சமமான உணவு முறையை கேப்டன் விஜயகாந்த் கொண்டு வந்த நிலையில், அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத நடிகர் அருண் விஜய் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் உருக்கமாக பேசியுள்ளார்.

புத்தாண்டு கொண்ட்டத்தை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ஏகப்பட்ட நடிகர்கள் படையெடுத்துக் கிளம்பி விட்டனர். அவர்கள் எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து சென்னை திரும்பி வரும் நிலையில், கேப்டன் விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்ட தேமுதிக அலுவலகத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாய்ப்பும் இல்ல.. வேலையும் இல்ல!. எல்லாம் போச்சி!.. வறுமையில் வாடும் பிஜிலி ரமேஷ்…

நடிகர்கள் வரிசையாக வருவார்கள் என அங்கேயே கேமராவும் மைக்கும் வைத்து மீடியா ஆட்கள் முதல் யூடியூப் சேனல்கள் வரை உட்கார்ந்து இருக்கும் நிலையில், காலையில் கார்த்தி மற்றும் சிவகுமார் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு நடிகர் சங்கம் சார்பாக வரும் 19ம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும் என அறிவித்துச் சென்றனர்.

இந்நிலையில், தற்போது கையில் அடிபட்டுள்ள நிலையிலும் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய அருண் விஜய் இனிமேல் விஜயகாந்த் வழியில் தானும் செயல்படப் போவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: போதும்ட சாமி! உங்க சகவாசமே வேணாம் – திடீர் முடிவால் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மக்கள் செல்வன்

தன்னுடைய பட ஷூட்டிங்கில் இனிமேல் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார். அருண் விஜய்யின் இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள், அப்போ இத்தனை ஆண்டுகள் பெரிய நடிகர்களுக்கு ஒரு மாதிரியான சாப்பாடு, சிறிய நடிகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேறு விதமான சாப்பாடு தான் வழங்கப்பட்டதா? என கேள்வி எழுப்பி உள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top