அருண் விஜயிற்கு வாய்ப்பு கொடுங்க... இயக்குனர் சொன்ன பதிலால் அழுத விஜயகுமார்...

by Akhilan |   ( Updated:2022-11-05 07:17:51  )
விஜயகுமார்
X

அருண் விஜய் – விஜயகுமார்

நடிப்பில் தனக்கென ஒரு அடையாளத்தினை கொண்ட விஜயகுமார் தனது மகனுக்காக பலரிடம் வாய்ப்பு கேட்டு அழைந்த சம்பவமும் நடந்து இருக்கிறது.

விதவிதமான வேடங்களில் நடித்து கோலிவுட்டில் புகழ் பெற்றவர் விஜயகுமார். இவரின் ஒரே மகன் தான் அருண்விஜய். முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் சினிமாவிற்குள் வந்தவருக்கு முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.

விஜயகுமார்

அருண் விஜய்

தொடர்ச்சியாக படம் செய்து வந்தாலும் அவருக்கு நல்ல படமோ, ஹிட் படமோ என எந்த லிஸ்டும் உருவாகவே இல்லை. இது விஜயகுமாருக்கு மிகப்பெரிய வருத்தத்தினை கொடுத்து இருக்கிறது. அவருக்காக பலரிடத்திலும் வாய்ப்புகள் கேட்க துவங்கினார். அதனால் அவரை கண்டாலே பல நடிகர்கள் தெறித்து ஓடிய சம்பவமும் கோலிவுட்டில் நடந்ததாம்.

தொடர்ந்து, ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் அவரிடம் வாய்ப்பு கேட்டு இருக்கிறார். விக்ரம் கதாபாத்திரத்தில் முதலில் அருண் விஜயினை நடிக்க வைக்கலாம் என ராஜகுமாரன் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி இருக்கிறார். ஆனால் அவர்கள் அருண் விஜயை நாயகனாக ஒப்புக்கொள்ளவில்லை. இதை விஜயகுமாரிடம் சாரி சார் என ராஜகுமாரன் கூறிவிட்டாராம்.

ராஜகுமாரன்

இதை கேட்ட விஜயகுமாருக்கு மிகப்பெரிய வருத்தமாக அமைந்ததாம். அவரிடம் அருண் விஜய் ஜாதகம் இருந்தால் காட்டுங்கள் எனக் கேட்டாராம். அதை விஜயகுமார் கொடுக்க வாங்கி பார்த்த ராஜகுமாரனுக்கு அதிர்ச்சி. இவருக்கு 20 வருடம் கழித்து தான் சினிமாவில் நல்ல பெயர் உருவாகும் எனக் கூறிவிட்டாராம். கேட்ட விஜயகுமாருக்கு கண்ணில் இருந்து கண்ணீரே வந்துவிட்டதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் ராஜகுமாரன்.

Next Story