கையில் ஏகப்பட்ட படங்கள்...ரிலீஸ்தான் பிரச்சனை... விரக்தியில் நாட்டாமை மகன்....

நடிகரின் மகனும் நடிகருமான அருண்விஜய் தமிழ்திரையுலகில் இன்னும் அவருக்கான ஓர் நிலையான இடத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கும் பன்முகத்திறமைசாலி. நடனம், சண்டை பயிற்சி, அமெரிக்கா சென்று சினிமா படிப்பு கற்றது என்று அருண் விஜய்க்குப் பல திறமைகள் இருக்கின்றன.
'பாண்டவர் பூமி’, 'என்னை அறிந்தால்’, 'குற்றம் 23′ திரைப்படத்தில் பன்முக முத்திரை பதித்தாலும், இன்னும் தன் இருப்பைத் தக்கவைக்க ஓடிக்கொண்டே இருக்கிறார். ஆரம்பகால படங்கள் இவருக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் தன்னுடைய விடாமுயற்சியால் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தன்னுடய திறமையை வெளிப்படுத்தினார்.
அதில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. அதையடுத்து தடையற காக்க, தடம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. யானை, பாக்ஸர், சினம், பார்டர் மற்றும் வாடீல் போன்ற படங்கள் அடுத்தடுத்து இவர் கைவசம் வைத்திருக்கும் படங்களாகும் ஆனால் கரோனா லாக்டவுனால் சில படங்கள் திரைக்கு வராமலயே நிற்கின்றன.
இனிமேலாவது திரையரங்கில் எதிர்பார்க்கலாம். ஆனாலும் மனம் தளராமல் இருக்கும் இவருடன் சுசீந்திரன் இயக்கவுள்ள படத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கருப்பு நிற மாஸ்க் அணிந்தவாறு போட்டோ போட்டு வெளியிட்டுள்ளார்.