Rajinikanth
சுந்தர் சி தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர். இவர் முதல்முறையாக இயக்கிய திரைப்படம் “முறைமாமன்”. தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனராக திகழ்ந்த சுந்தர் சி, அதனை தொடர்ந்து “முறை மாப்பிள்ளை”, “உள்ளத்தை அள்ளித்தா”, “மேட்டுக்குடி” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கினார்.
இதனை தொடர்ந்து சுந்தர் சி, ரஜினிகாந்தை வைத்து இயக்கிய திரைப்படம் “அருணாச்சலம்”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சௌந்தர்யா, ரம்பா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கிரேசி மோகன் வசனம் எழுதியிருந்தார். இத்திரைப்படம் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படமாக அமைந்தது. மேலும் இத்திரைப்படம் அமோக வெற்றிபெற்றது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது “மேட்டுக்குடி” திரைப்படத்தின் பணிகளில் இருந்தபோது சுந்தர் சிக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. அதனை அவரது உதவியாளராக இருந்து சுராஜ் எடுத்து பேச, மறுமுனையில், “நாங்கள் ரஜினி சாரின் அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம்” என கூறியிருக்கின்றனர். அதற்கு சுந்தர் சி, “யாரோ ஃபோன் போட்டு விளையாடுறாங்க. நீ ஃபோனை வச்சிடு” என கூறினாராம்.
அதன் பின் மீண்டும் அழைப்பு வர, அப்போதுதான் சுந்தர் சி நம்பினாராம். இதனை தொடர்ந்து ரஜினிகாந்தை சுந்தர் சியும் சுராஜும் சென்று சந்தித்தார்கள். “ஒரு படம் பண்ணலாம், கதை இருந்தால் சொல்லுங்கள்” என ரஜினிகாந்த் கூற, அதன் பின் ஓரு அசத்தலான கதையை தயார் செய்திருக்கிறார் சுந்தர் சி.
இத்திரைப்படத்திற்கு முதலில் குபேரன் என்ற பெயர்தான் வைக்கப்பட்டதாம். அந்த டைட்டில் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பொதுவில் கசிந்துவிட்டதாம். ஆதலால் அந்த டைட்டில் வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த், “அருணாச்சலம்” என்ற டைட்டிலை வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். இவ்வாறுதான் “அருணாச்சலம்” திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: ஒட்டு துணி இல்லாமல் கதாநாயகிக்கு காட்சி!.. பாரதி ராஜா படத்தில் கிராமத்தினர் செய்த சர்ச்சை… அடக்கொடுமையே!..
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…