எனிமி படத்திற்கு துணை நிற்கும் பிரபல தயாரிப்பாளர்...பாராட்டும் சினிமா உலகம்

by சிவா |   ( Updated:2021-10-24 23:55:24  )
enmey
X

நடிகர் விஷாலும், ஆர்யாவும் வாடா போடா நண்பர்கள். ஆனால், இருவரும் மோதிக்கொள்ளும் திரைப்படமாக ‘எனிமி’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்னாளினி ரவி மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஒரு ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை வினோத்குமார் என்பவர் தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளி ரிலீஸை குறி வைத்துள்ளது. ஆனால், அண்ணாத்த திரைப்படம் வெளிவருவதால் தன் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை எனக்கூறி சமீபத்தில் ஒரு ஆடியோவை வினோத் வெளியிட்டிருந்தார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எனிமி படத்திர்கு 250 தியேட்டர்களாவது கொடுங்கள். இல்லையேல் யாராக இருந்தாலும் நான் போராடுவேன் என அவர் பேசியிருந்தார்.

enemy

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் குரல் கொடுத்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனிமி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் எனிமி திரைப்படத்திற்கு நண்பர்களாக வேண்டும் என பிராத்தனை செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தமிழ் திரையுலகில் ஒருவருக்கு பிரச்சனையென்றால் மற்ற தயாரிப்பாளர்கள் ஓடிவந்து ஆதரவாக நிற்பது பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

Next Story