தனுஷ் பாடலை பாடியதால் ரத்த வாந்தி எடுத்த பிரபல பாடகர்… ஒரு அதிர்ச்சி சம்பவம்…

Published on: February 10, 2023
Dhanush
---Advertisement---

“கனா”, ‘நெஞ்சுக்கு நீதி” போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் அருண்ராஜா காமராஜ். இவர் “ராஜா ராணி”, “மான் கராத்தே”, “பென்சில்”, “ரெமோ”, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட.

Arunraja Kamaraj
Arunraja Kamaraj

குறிப்பாக ஹை பிட்ச்சில் பாடுவதில் புகழ்பெற்றவர். “கபாலி”-ன் “நெருப்புடா” பாடல், “பைரவா”வின் “வரலாம் வரலாம் வா”, “காலா”வின் “நிக்கல் நிக்கல்” போன்ற பல பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளார். மேலும் பல திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார்.

இவ்வாறு பன்முகத்தனை கொண்ட கலைஞராக திகழ்ந்து வருகிறார் அருண்ராஜா காமராஜ். இந்த நிலையில் தனுஷுக்காக ஒரு பாடல் பாடியபோது வாயில் இருந்து ரத்தம் வந்தது குறித்த ஒரு சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Asuran
Asuran

தனுஷ் நடிப்பில் மாபெரும் வெற்றிப்பெற்ற “அசுரன்” திரைப்படத்தை நம்மால் மறந்திருக்கமுடியாது. சாதிய ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக தனுஷ் கேரியரில் முக்கியமான வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமாக அமைந்தது. குறிப்பாக “வா அசுரா” என்ற பாடல் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி பாடியிருந்தார்.

Arunraja Kamaraj
Arunraja Kamaraj

இந்த நிலையில் இந்த பாடலை பாடி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றபோது தொண்டைப் பகுதி மிகவும் வலித்ததாம். எச்சில் துப்பும்போது ரத்தமாக வந்ததாம். அந்த பாடலை அவர் மிகவும் ஹை பிட்ச்சில் பீறிட்டு பாடியிருந்தார். ஆதலால் அவரது தொண்டை கிழிந்துவிட்டதாம். மேலும் அதன் பின் அவருக்கு பாடுவதற்கே பயமாக இருந்ததாம். இவ்வாறு அந்த பேட்டியில் அருண்ராஜா காமராஜ் தனது அனுபவத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சமையல்காரராக வேலை பார்த்த நடிகர்.. பின்னாளில் டெர்ரர் வில்லன்… யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!