More
Categories: Cinema News latest news

அருண்விஜய்க்கும் சரி, இயக்குனர் பாலாவுக்கும் சரி… இது தான் கம்பேக்… அடித்துச் சொல்லும் பிரபலம்..!

அருண் விஜய்க்கு நீண்ட நாள்களாக எந்தப் படமும் சொல்லும்படியாக வரவில்லை. அவரும் எவ்வளவோ மெனக்கிட்டுத் தான் பார்க்கிறார். என்னை அறிந்தால், மாஞ்சாவேலு, தடையறத் தாக்க, தடம் ஆகிய படங்களில் நன்றாகத் தான் நடித்தார். 2001ல் அவர் நடித்த பாண்டவர் பூமி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன்பிறகு தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய ஹிட்டை அவர் படம் தரவில்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பாலாவின் இயக்கத்தில் வருகிறது வணங்கான். ஆரம்பத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க… விடுதலை 2 படம் செய்த அந்த மகத்தான சாதனை… எப்படி இதெல்லாம் நடக்குது…? நம்பவே முடியலையே…!

அதன்பிறகு கதையில் ஏற்பட்ட மாற்றங்களால் அவருக்குப் பதிலாக அருண்விஜய் மாற்றப்பட்டார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்து வருகிறார். ‘வணங்கான்’ படம் எப்படி வந்துள்ளது என்ற கேள்விக்கு ஒரு யூடியூப் சேனலில் வலைப்பேச்சு அந்தனன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

‘பி’ ஸ்டுடியோ என்ற பெயரில் இயக்குனர் பாலா தயாரித்து, கதை எழுதி இயக்கிய படம் வணங்கான். அருண் விஜய் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து வருகிறார். அவருடன் இணைந்து ரோஷ்னி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி, ரிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

வணங்கான் படம் ரொம்ப பிரமாதமா இருக்கு. ரொம்ப அல்டிமேட்டா இருக்கு. அருண்விஜய் வாய் பேச முடியாத கேரக்டர். டயலாக் எல்லாம் கிடையாது. இது அருண் விஜய்க்கும், பாலாவுக்கும் கம்பேக் தான். படத்தைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். அதுக்கான வாய்ப்பு கிடைச்சது. பழைய பாலா திரும்ப வந்துட்டாருன்னு சொல்ற அளவுக்கு வந்துருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Vanankaan

இயக்குனர் பாலாவின் ஆரம்ப கால படங்கள் சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி வரை படம் படுமாஸாக உள்ளது என்று ரசிகர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. அதன்பிறகு வந்த தாரை தப்பட்டை பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. நாச்சியார் படமும் அப்படித்தான். இந்தப் படம் 2018ல் வெளியானது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது வணங்கான் படம் அவரது இயக்கத்தில் வருவதால் இது நிச்சயம் அவருக்குக் கம்பேக் தான் என்கின்றனர். இயக்குனர் பாலாவைப் பொருத்தவரை கதாநாயகனாக நடிக்கப் போகிறவர் அவரிடம் தன்னை ஒரு 3 ஆண்டுகளாவது அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது தான் அவர் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

 

Published by
ராம் சுதன்