தனுஷுடன் இணைந்து நடிக்கும் அருண் விஜய்!.. என்னை அறிந்தால் போல பேர் வாங்கி தருமா?!...
Arun Vijay: தமிழில் எண்ணற்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய். அருண் குமார் என்கிற பெயரில் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படம் முறை மாப்பிள்ளை. அதன்பின் இவர் நடிப்பில் வெளியான பிரியம் திரைப்படம் வெற்றி பெற்றது.
ஆனால், அதன்பின் பல படங்களில் நடித்திருந்தாலும் அவை வெற்றிப்படங்களாக அமையவில்லை. இத்தனைக்கும் நன்றாக டான்ஸ் ஆடுவார், சண்டை காட்சிகளில் அசத்தலாக நடிப்பார். ஏனோ, இயக்குனர்கள் இவரை கண்டுகொள்ளவில்லை. எனவே, கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: கோட் கிளைமேக்ஸில் தோனியும், விஜயும் ஒரு செம சீன்!.. ஆனா நடக்காம போச்சே!…
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜயை வில்லனாக நடிக்க வைத்தனர். அந்த படத்தில் அருன் விஜய்க்கு நல்ல காட்சிகள் வைக்க வேண்டும் என அஜித்தே சொல்லிவிட்டதால் அது அப்படியே நடந்தது. எனவே, அஜித் ரசிகர்களே அருண் விஜயை கொண்டாடினார்கள்.
அதன்பின் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. குற்றம் 23, தடயற தாக்க, தடம் என சில ஹிட் படங்களை கொடுத்தார். சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். என்னை அறிந்தால் படத்திற்கு பின் மற்ற ஹீரோக்களுடன் இணைந்து அருண் விஜய் நடிக்கவில்லை.
அதற்கு காரணம், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதில் அருண் விஜய் உறுதியாக இருக்கிறார். பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கான் வணங்கான் படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில்தான், தனுஷ் அடுத்து இயக்கி நடிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்க அருண் விஜய் சம்மதித்திருக்கிறார். தனுஷ் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே அஜித்தோடு நடித்து இரண்டாவது ரவுண்டு வந்ததால், தனுஷுடன் நடிப்பது தனக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அருண் விஜய் நம்புகிறாராம். ஏனெனில், சமீபத்தில் தனுஷ் இயக்கி நடித்து வெளியான ராயன் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயுக்கு அண்ணியா கேட்டப்ப நோ சொன்ன பிரபல நடிகை… ஆனா பின்னாடி நடந்து செம பிளான்…