தமிழ் சினிமாவில் ஆரம்பகாலங்களில் இருந்தே நடித்தாலும் இப்பொழுது தான் தன் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார் நடிகர் அருண்விஜய். தனி பாதையை அமைத்துக் கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் நடிகர் அருண்விஜய்.
பிரபல நடிகரின் வாரிசு என்றாலும் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமலயே இருந்தது. தன் விடா முயற்சியால் ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளார். மேலும் சமீபத்தில் வெளியான யானை படமும் எதிர்பார்த்த அளவில் வசூலை பெறவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது.
கைவசம் நிறைய புது படங்கள் வைத்திருக்கும் அருண்விஜய் சம்பளம் பற்றி கேட்டால் யானை படம் வெளியானதும் தீர்மானிக்கலாம் என்றே கூறிவந்தார். அந்த அளவுக்கு அந்த படத்தின் வசூலை நம்பியிருந்தார். இதன் மூலமாகவே வெங்கட்பிரபுவின் தெலுங்கு படம் நாகசைதன்யாவுடன் அருண்விஜயை கமிட் செய்திருந்தனர்.
இதையும் படிங்கள் : முன்னாள் கணவருடன் ஒரே ஹோட்டலில் நடிகை அமலாபால்…! ஷாக் கொடுத்த ஜோடிகள்..
யானை படத்தை நம்பி முன்பணமாக 2.50 கோடியை கேட்டாராம் அருண்விஜய். ஆனால் யானை படம் நினைத்த வசூலை பெறவில்லையாதலால் அந்த பணத்தை தரமுடியாது என கூற அருண்விஜயும் நடிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இப்பொழுது அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்க இருக்கிறாராம்.
Rajinikanth: அபூர்வ…
தமிழ்த்திரை உலகில்…
நடிகை கீர்த்தி…
புஷ்பா 2…
நடிகர் கவின்…