Retta Thala movie:
சமீபத்தில்தான் அருண்விஜய் நடிக்கும் ரெட்டை தல படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்தப் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். அதை பற்றி அருண் விஜய் மிகவும் சிலாகித்து பேசியுள்ளார். தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் இட்லி கடை.
அந்தப் படத்தை தனுஷே இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஃபேமிலி கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சென்டிமென்ட் படமாக இட்லி கடை படம் அமைந்தது. அந்தப் படத்தில் தனுஷுக்கு வில்லனாக அருண் விஜய்தான் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் கெத்தாக காட்டப்பட்ட அருண் விஜய் கடைசியில் காமெடி பண்ணுவது மாதிரி நடித்துவிட்டு போயிருப்பார். அதுதான் படத்தின் கிளைமாக்ஸுக்கு கொஞ்சம் கூட செட்டாகவில்லை. ஆனால் கதையை வைத்து பார்க்கும் போது ரசிக்கக் கூடிய படமாகத்தான் இருந்தது.
அதன் பிறகு அருண் விஜய் ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ரெட்டத்தல. இந்தப் படத்தில் கண்ணம்மா கண்ணம்மா என்ற ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தப் பாடலை பாடியதே தனுஷ்தான்.
அதற்கு பின்னணியில் உள்ள ப்ளாஷ் பேக்கை அருண் விஜய் இன்று கூறியிருக்கிறார். இட்லி கடை படத்தின் போது ரெட்டத்தல படத்தின் சில கிளிம்ஸ் வீடியோவை அருண்விஜய் தனுஷிடம் காட்டினாராம். அது தனுஷுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை போல கண்ணம்மா கண்ணம்மா பாடலையும் தனுஷை வைத்து பாட வைக்கலாம் என்று படக்குழு முடிவெடுக்க் இதை அருண் விஜயிடம் சொல்லியிருக்கிறார்கள்.

தனுஷிடம் கேட்டு சொல்லுங்கள் என்று அருண்விஜயிடம் சொல்ல, கூடவே அந்த கண்ணம்மா கண்ணம்மா பாடலை தனுஷின் ஏஐ வாயிஸில் போட்டு இதை அவரை கேட்க சொல்லுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். அட என்னங்கடா பண்றீங்கனு நினைத்து தனுஷிடம் காட்டியிருக்கிறார் அருண்விஜய்.
பாடலை கேட்டதும் தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். ஆமா இது யார் வாய்ஸ்? என்று தனுஷ் கேட்டதும், எனக்கு தர்ம சங்கடமா போச்சு. ப்ரோ இது உங்களோட ஏஐ வாய்ஸ்தான். ஆனா இத நீங்கதான் பாடணும்னு அருண்விஜய் சொல்ல, உடனே ஓகே சொல்லிவிட்டாராம் தனுஷ்.
