தல வர்றாரு.. ‘இட்லி கடை’ பற்றிய கேள்விக்கு அருண்விஜய் கொடுத்த தரமான பதில்

by Rohini |   ( Updated:2025-03-30 09:05:26  )
arunvijay
X

arunvijay

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து முடித்துள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ் ,சுனில் ,பிரசன்னா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தேதியில் தனுஷ் தானே இயக்கி நடித்து வரும் இட்லி கடை திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். அதுவும் முதன்முறையாக தனுஷ் மற்றும் அருண் விஜய் காம்போவில் இந்த படம் உருவாவதால் அதுவும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

விடாமுயற்சி படத்தின் தோல்வி அஜித் ரசிகர்கள் மத்தியில் குட் பேட் அக்லி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று அருண் விஜய் தன்னுடைய வலைதள பக்கத்தில் இட்லி கடை படத்தின் போஸ்டரை பதிவிட்டு இது பெரிய அளவில் வரப்போகிறது என்றும் பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ரிலீஸ் தேதியை காணோமே என்ற ஒரு கேள்வியை கேட்டார்.

idly kadai

அதற்கு அருண் விஜய் அந்த ரசிகருக்கு பதிலும் அளித்திருக்கிறார். தல வராரு. எங்களுக்கு இன்னும் ஷூட்டிங் முடிய வேண்டி இருக்கிறது என்று பதில் அளித்திருக்கிறார். இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு இன்னும் எஞ்சியிருக்கும் நிலையில் செப்டம்பர் அல்லது ஆகஸ்ட் மாதம் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விடுவார்கள். அதே போல் ஜூன் 20ஆம் தேதி தனுஷ் நடிப்பில் குபேரன் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

Next Story