‘வணங்கான்’ படப்பிடிப்பில் பழையபடி கெத்து காட்டும் பாலா - பம்பும் அருண் விஜய்!..

by Rohini |   ( Updated:2023-04-12 13:41:27  )
arun
X

arun

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குனர் பாலா. பெரிய தாக்கங்களை ஏற்படுத்திய படங்களை கொடுத்த பெருமை பாலாவை சேரும். சேது, நந்தா, பிதாமகன், தார தப்பட்டை, அவன் இவன், பரதேசி போன்ற மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட படங்களாகும். பாலாவை பற்றி சொந்த வாழ்க்கையில் குறை சொன்னாலும் அவரின் படம் தரமானதாக இருக்கும்.

தற்போது வணங்கான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் பாலாவை பற்றி மற்றுமொரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கெனவே வணங்கான் படத்தில் எந்த மாதிரியான பிரச்சினைகள் வந்தது, சூர்யாவுக்கும் பாலாவுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றை பற்றி பல செய்திகள் வந்தன.

அவை எல்லாம் முடிந்து சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகி அவருக்கு பதிலாக அருண்விஜய் இந்தப் படத்தில் இணைந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். 25 நாள்கள் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து கன்னியாகுமரியில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்புதான் படக்குழு சென்னை வந்திருக்கிறது.

இந்த நிலையில் அந்தப் படத்தை பற்றி விசாரித்ததில் பாலா அந்தப் படத்தில் சூர்யாவை மட்டும் தான் மாற்றியிருக்கிறாராம். மற்றபடி ஏற்கெனவே சூர்யாவை வைத்த சீன்களை மீண்டும் அருண்விஜயை வைத்து எடுத்துக் கொண்டுதான் இருந்தாராம்.

சூர்யாவை எப்படி ஓட விட்டாரோ அதே போல தான் அருண்விஜயையும் ஓடவிட்டிருக்கிறாராம். இதற்கு முன் மகிழ் திருமேனி படத்தில் அருண்விஜய் நடிக்கும் போது டேக் முடிந்து மகிழ் திருமேனியுடன் ஜாலியாக வந்து பேசி அரட்டை அடிப்பாராம் அருண்விஜய்.

ஆனால் வணங்கான் படப்பிடிப்பில் அவர் டேக் முடிந்ததும் அவர் தனியாக போய் உட்கார்ந்து கொள்கிறாராம். மேலும் ஒவ்வொரு டேக் இடைவெளியின் போது மேக்கப் மேன் வந்து டச்சப் பண்ணுவார்களாம். ஆனால் இந்தப் படத்தில் அருண்விஜயே வேண்டாம் என்று சொல்லி விரட்டி விடுகிறாராம். ஏனெனில் அந்த அளவுக்கு டெரராக இருக்கிறாராம் பாலா. பாலா செட்டிற்குள் வந்ததும் கப்சிப் ஆகிவிடுகிறதாம். இன்னும் அதே கெத்துடன் தான் சுற்றி வருகிறாராம் பாலா.

இதையும் படிங்க : எவ்வளவு சம்பளம் வேணும்னாலும் தரோம்!. ரஜினி ப்ரோஜக்ட்டில் களம் இறங்கும் கே.ஜி.எஃப் குழு!..

Next Story