நடிகையோடு நெருக்கத்தில் இருந்த அருண்விஜய்...! பார்த்து ஆடிப்போன அவரது மனைவி...!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்திலயே சினிமாவிற்குள் வந்தவரானாலும் இவரது விடாமுயற்சியால் இன்று மற்ற நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வளர்ந்து வருகிறார் நடிகர் அருண்விஜய். இவரது என்னை அறிந்தால் படம் தான் இவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த படமாக இருந்தது.
அதிலிருந்து ஏகப்பட்ட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த படத்தில் வில்லனாக கலக்கியிருந்த அருண்விஜய்க்கு தொடர்ந்து சில படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் வர அதை தட்டிக் கழிக்காமல் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அதன் மூலம் தன் நடிப்பை நிரூபித்தார்.
அதன் வாயிலாக நிறைய படங்களில் ஹீரோவாக கமிட் ஆக அடுத்தடுத்து லட்டு லட்டான படங்களை மக்களுக்கு கொடுத்தார். தடையற காக்க, தடம், குற்றம் 23 போன்ற படங்கள் இவருக்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதிலும் இந்த படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக எப்படி அசத்தினாரோ அதே நேரத்தில் ரொமான்ஸிலும் பட்டையை கிளப்பியிருப்பார்.
இவரின் இப்போதுள்ள பெரும்பாலான படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் பெண்கள் பொறாமை படும் அளவிற்கு அசத்தலாக நடித்து வருகிறார். படத்தின் ப்ரிவியூ ஷோக்கு சினம் படத்தை பார்ப்பதற்காக மனைவியுடன் போயிருக்கிறார் அருண்விஜய். பெரும்பாலும் சூட்டிங்கிற்கு அவரது மனைவியும் வருவாராம். சூட்டிங்கில் பார்த்தது போக ஏதாவது ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றால் படம் பார்க்கும் போது என்ன இது? என்று தொடையை கில்லுவாராம். இதே போன்ற சம்பவம் இந்த சினம் படத்திலும் அரங்கேறியிருக்கிறது என்று கூறினார் அருண்விஜய்.