தனுஷ், சிவகார்த்திகேயனை நெருங்கும் அருண்விஜய்! சத்தமே இல்லாமல் சாதனை செய்யும் ‘மிஷன்’ டீம்

Actor ArunVijay: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் நடிகர் அருண்விஜய். சத்தமே இல்லாமல் சைலண்ட் கில்லராக இப்போது பொங்கல் ரிலீஸில் தன் படத்தின் மூலம் முன்னிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

பொங்கல் ரிலீஸாக அயலான் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களோடு அருண்விஜயின் படமான மிஷன் படமும் ரேஸில் குதித்தது. தனுஷ், சிவகார்த்திகேயனின் மார்கெட் நிலவரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதனால் அவர்களின் படங்களின் மேல்தான் அனைவரின் பார்வையும் திரும்பியது.

இதையும் படிங்க: மவனே எவன் ஜெயிச்சாலும் இத பண்ணுவேன்டா! சொன்னதை செய்து காட்டிய விஷ்ணு – இது வேற லெவல்

ஆனால் சைலண்டாக இருந்து அருண்விஜய் முன்னேறிக் கொண்டிருக்கிறார். மிஷன் திரைப்படம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விமர்சன ரீதியாக பெருமளவு மிஷன் திரைப்படத்தைத்தான் கொண்டாடி வருகிறார்கள்.

ஆனால் வசூலில் சாதனை படைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் மிஷன் திரைப்படத்திற்கு போதிய ஸ்க்ரீன் ஒதுக்கப்படவில்லையாம். அதனால் பெரும்பாலான ரசிகர்கள் இன்னும் கூடுதல் திரை ஒதுக்கக் கூறி சொல்லி வருவதாக அருண்விஜயே ஒரு பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: கமல் ரத்த வாந்தி எடுத்தான்.. பாரதிராஜா சொன்ன அதிர்ச்சி சம்பவம்…

அவ்வப்போது சறுக்கல்களை சந்திக்கும் இயக்குனர் ஏ.எல்.விஜய். அவரோடு முதல் முறையாக அருண்விஜய் மிஷன் திரைப்படத்தால் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த கூட்டணி வீண்போகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பொங்கல் ரீலீஸில் பக்கா ஆக்‌ஷன் படத்தோடு களமிறங்கியிருக்கிறார் ஏ.எல்.விஜய். படம் ஆரம்பத்ததில் இருந்து முடியும் வரை எங்கேயும் சோர்வை ஏற்படுத்தவே இல்லை என்றுதான் உண்மை. அந்தளவுக்கு சிறப்பான ஸ்க்ரீன் ப்ளே செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார் ஏ.எல்.விஜய். கூடிய சீக்கிரம் தனுஷ், சிவகார்த்திகேயனை ஓரம் கட்டுவார் அருண்விஜய் என்றுதான் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க: சிம்பு – தேசிங்கு பெரியசாமி படம் டிராப் ஆகிறதா?!.. என்னப்பா சொல்றீங்க?!.. நடப்பது என்ன?..

 

Related Articles

Next Story