அரவிந்த் சாமியின் மகன், மகளை பார்த்திருக்கிறீர்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!

Published on: September 25, 2021
arvind-swamy-dp
---Advertisement---

மனைவி மற்றும் மகளுடன் அரவிந்த் ஸ்வாமி!

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆண் அழகன் என ஒட்டுமொத்த பெண்கள் கூட்டத்தாலும் ரசிக்கப்பட்டவர் நடிகர் அரவிந்த் சுவாமி. பெரும் புகழ் பெற்ற நடிகரான இவர் மிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழியில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரின் திரை வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்த படங்கள்.

arvind-swamy-1
Arvind swamy

நடிகர் அரவிந்த் சாமியின் சொந்த வாழ்க்கை என்று எடுத்தோமேயானால், 1994ல் காயத்ரி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் 2010ல் விவாகரத்து பெற்றுவிட்டு 2012ல் அபர்ணா முகர்ஜி என்ற பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டார்.

arvind-swamy-2
Arvind swamy

முதல் மனைவிக்கு பிறந்த ஒரு மகனும் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஒரு மகள் என இப்போது நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதே போல் திரையில் தனி ஒருவன், பாஸ்கர் தி ராஸ்கல், நரகாசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்து இரண்டாவது இன்னிங்சிலும் மார்க்கெட் பிடித்துவிட்டார். இந்நிலையில் மனைவி, மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது.

பிரஜன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment