மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதில் நடிக்கவேண்டியது அவர்தான்!.. எப்படி மிஸ் ஆச்சி!..

Published on: September 18, 2024
---Advertisement---

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு ஹீரோவாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் கலக்கிய திரைப்படம்தான் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இது அமைந்தது. டைம் லூப் என சொல்லப்படும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞனின் கதை.

ஒரு சுழற்சியில் இறந்தால் அடுத்த சுழற்சியில் அவர் வந்துவிடுவார். அப்படி இறக்கவில்லை எனில் நிகழ்காலத்திற்கு வந்துவிடுவார் என்கிற ஒன் லைனுக்கு வெங்கட்பிரபு அமைத்திருந்த திரைக்கதை இயக்குனர்களையே ஆச்சர்யப்பட வைத்தது. முதலமைச்சரை கொல்ல எஸ்.ஜே.சூர்யா திட்டம் போடுகிறார்.

இதையும் படிங்க: ஓடிடி, சேட்டிலைட் எல்லாமே வீழ்ச்சி… வேட்டையன் படத்துக்கு 70 சதவீத லாபம் வந்தது எப்படி?

இதை தெரிந்துகொண்டு டைம் லூப்பை பயன்படுத்தி சிம்பு எப்படி அவரின் திட்டத்தை முறியடித்தார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் சிம்புவும், எஸ்.ஜே.சூர்யாவும் போட்டி போட்டு நடித்திருந்தனர். அதிலும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்த படத்திற்கு பின் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக மாறிவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின் மார்க் ஆண்டனி படமும் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது பல படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. மாநாடு படம் 90 கோடி வரை வசூல் செய்து வெற்றி பெற்றது.

aravind
#image_title

இந்த படம் உருவானபோது பல சிக்கல்கள் எழுந்தது. சிம்புவால் பல மாதங்கள் இப்படம் தாமதமானது. அதன்பின் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இப்படத்தில் நடித்தார். ஒருபக்கம், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருந்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்து அர்விந்த்சாமி என்பது பலருக்கும் தெரியாது.

இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அர்விந்த்சாமி ‘ஒரு மாதம் எனக்காக காத்திருக்க சொன்னேன். ஆனால், வெங்கட்பிரபுவால் அது முடியவில்லை. அதை நான் மதிக்கிறேன். மாநாடு படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஏனெனில், என்னுடைய வேடத்தில் என்னால் மற்றவர்களை கற்பனை செய்து பார்க்க முடியாது’ என சொல்லி இருக்கிறார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.