
Cinema News
சந்தானத்தை பங்கமாய் ஏமாற்றிய சார்பட்டா நடிகர்.! எவளோ பெரிய நடிகன இப்படி கதற விட்டுடீங்களே சார்.?!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர காமெடியனாக இருந்து தற்போது ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சந்தானம். இவர் காமெடியனாக நடிக்கும் போது கிட்டத்தட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க இருந்த ஒரே காமெடியன் இவர் தான். வடிவேலு, விவேக் போன்றோர் அப்போது சினிமாவில் ஆக்டிவாக இல்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அந்த சமயம் சந்தானத்திற்கு ஆர்யா, ஜீவா, விஷால் என ஏகப்பட்ட நண்பர்கள் இருந்தனர். அனைவரையும் மச்சான் என கூப்பிடும் அளவுக்கு நெருக்கம். அதனால் அதான் அவர்களுடன் காமெடி செய்யும் போது அவ்வளவு இயற்கையாக இருக்கும் .
அவர் பல ஹீரோக்கள் உடன் தற்போதும் நெருக்கமாக பேசும் அளவுக்கு நட்பு பாராட்டி வருகிறார். இவர் ஹீரோ ஆனது பிற்காடு, உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைக்க, நடிகர் ஆர்யாவிடம் டிப்ஸ் கேட்டுள்ளார். உடனே, ஆர்யா, ஓர் டிப்ஸ் கூறியுள்ளார்.
இதையும் படியுங்களேன் – பேருந்துக்குள் சிக்கி தவித்த நயன்தாரா.! பதட்டத்தில் ரசிகர்கள்.! வெளியான த்ரில் வீடியோ..,
ஒரு டீ குடித்தால் சரியாகிவிடும். காலை 4 மணிக்கு வந்துவிடு போயிரலாம் என கூறியுள்ளார். இதனை நம்பி ஆர்யா வீட்டுக்கு 4 மணிக்கு சென்ற சந்தானத்துக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்யா வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் மஹாபலிபுரம் வரையில் சைக்கிளில் பயணம் செய்து அங்கு டீ குடிக்க வேண்டும் என கூறி சந்தானத்திற்கு ஷாக் கொடுத்துள்ளார் ஆர்யா.
இதனை ஒரு மேடையில் சந்தானம் கலகலப்பாக கூறினார். அவ்வளோ தூரம் சைக்கிளை மிதித்து சென்று அங்கு எனக்கு பசி அதிகமாக இருந்தது. ஆனால், ஆர்யா எனக்கு டீ மட்டுமே வாங்கி கொடுத்தான் என தனது அனுபவத்தை மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்டார் சந்தானம்.