‘கொலை’ படத்தை கொலை செய்றாரேனு நினைச்சோம்! புரோமோஷனுக்கு ஆர்யா வந்ததன் பின்னனி இதுதானா?

vijay
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கொலை. இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடிகை ரித்திகா சிங் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒரு மர்மமான கொலைக்கு பின்னணியில் இருக்கும் காரணத்தை ரித்திகா சிங்குடன் இணைந்து விஜய் ஆண்டனி தேடும் முயற்சியிலேயே படத்தை நகர்த்தி இருக்கிறார் படத்தின் இயக்குனரான பாலாஜி கே குமார்.
படத்தில் பெப்பர் சால்ட் லுக்கில் வலம் வரும் விஜய் ஆண்டனி சில ப்ரோமோஷன்களில் கூட அதே லுக்கில் தான் வந்திருந்தார். பல இடங்களில் ப்ரமோஷனுக்காக போன விஜய் ஆண்டனி இறுதியாக நடிகர் ஆர்யாவுடன் இணைந்து தன் படத்தை புரொமோட் செய்திருந்தார்.

vijay1
அதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கும் சரி ரசிகர்களுக்கும் சரி அப்படி என்ன விஜய் ஆண்டனிக்கும் ஆர்யாவுக்கும் இருக்கும் நட்பு என கேள்வி எழுப்பி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் ஒரு பெரிய நடிகரை அழைத்து வந்திருந்தால் கூட இது படத்தின் பிரமோஷனுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கலாம்.
சமீபத்தில் தான் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த காதர் பாட்ஷா படம் எப்பேர்பட்ட அடியை வாங்கியது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். அப்படி இருக்கும்போது ஆர்யாவை ஏன் அழைத்து வந்தார் என அனைவரும் கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் ஏற்கனவே இந்த படத்தின் இயக்குனர் பாலாஜி பூஜாவை வைத்து விடியும் முன் என்ற படத்தை இயக்கியிருந்தார். அதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் கமிட் ஆகி இருந்தார்.

vijay2
ஆனால் சில பல காரணங்களால் அந்தப் படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியவில்லையாம். அதற்கு பதிலாக அந்தப் படத்தை இப்போது ஆர்யாவை வைத்து எடுக்க இருக்கிறாராம். அதன் விளைவாகவே இந்த படத்தின் பிரமோஷனில் ஆர்யாவும் கலந்து கொண்டு தன்னை ப்ரொமோட் செய்திருக்கிறார் என கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க :அடேய் எப்பா.. போதும்டா சாமி! சங்கர் சொன்ன ஐடியாவால் காண்டான உதயநிதி – ‘இந்தியன்2’ வில் ரணகளம்