தொடர் சர்ச்சைகளில் சிக்கும் ஆர்யா… இப்படியே போனால் கேரியர் அவ்ளோதான்!….

Published on: July 6, 2022
---Advertisement---

நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான அரண்மனை 3-திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், நடிகர் ஆர்யா இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஒரு கிராமத்து பின்னணியில் உருவாகும் படத்தில் நடிக்கவிருந்தாராம். அந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாகவும் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், கமல் பேசிய சம்பளத்தை விட ஆர்யா கேட்ட சம்பளம் அதிகமாக இருந்த காரணத்தால், அந்த படம் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்- சொன்னதை செஞ்சு காட்டிய அஜித்.. குடும்பத்துடன் விமானத்தில் பறந்தார் AK.! வைரல் வீடியோ இதோ…

இதனைத்தொடர்ந்து, சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா ஒரு புதுப்படத்தில் நடிக்கவிருந்தாராம். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பதாகவும் இருந்ததாம்.

இந்த படத்திற்கும் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தை விட அதிகமாக சம்பளம் வேண்டும் என்று ஆர்யா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திடம் கேட்டுள்ளாராம். ஆனால், இதற்கு அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துவிட்டதாம். இப்படியே அணைத்து படங்களுக்கும் சம்பளம் அதிகமாக வேண்டும் என்று கேட்டால், ஆர்யாவுக்கு தமிழில் பட வாய்ப்புகளே  வராது என பலர் வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார்கள்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.