அந்த ஐட்டம் பாட்டுல நான் ஆடுறதுக்கு ஆர்யாதான் காரணம்! – உண்மையை உடைத்த சாயிஷா..
வனமகன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படத்தில் இருந்தே அவரது நடனம் சிறப்பாக பேசப்பட்டது. சாயிஷா உடலை வளைத்து நடனம் ஆடும் வித்தை தெரிந்தவர். அவரது நடனத்திற்காகவே பலரும் அப்போது அவருக்கு ரசிகர்களாக இருந்தனர்.
அதை தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்றார் சாயிஷா. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜுங்கா திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வந்த சாயிஷா ஆர்யாவிற்கு ஜோடியாக கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தார்.
அதற்கு பிறகு ஆர்யாவிற்கும், சாயிஷாவிற்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். அதன் பிறகும் கூட காப்பான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். பொதுவாக என்னதான் பெரும் கதாநாயகர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு தனது மனைவி மற்ற நடிகர்களுடன் நெருங்கி நடிப்பதை நடிகர்கள் விரும்புவதில்லை.
வாய்ப்பு வாங்கி கொடுத்த ஆர்யா:
இதனால் பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டுவிடுவதுண்டு. சாயிஷா ஆர்யா ஜோடிக்கு குழந்தை பிறந்த பிறகும் கூட தற்சமயம் பத்து தல திரைப்படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றில் ஆடியுள்ளார் சாயிஷா.
இதுக்குறித்து சாயிஷா கூறும்போது “எனது கணவர் கொஞ்சம் முற்போக்கான எண்ணவோட்டம் கொண்டவர். தயாரிப்பாளர் ஐட்டம் பாடலுக்கு ஆட வைக்க ஆள் வேண்டும் என ஆர்யாவிடம் கேட்டபோது அவர்தான் சாயிஷா இன்னும் சினிமாவில் முயற்சி பண்ணிட்டுதான் இருக்காங்க. அவங்கக்கிட்ட கேட்டு பாருங்களேன் என கூறியுள்ளார். என் கணவர்தான் எனக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்” என சாயிஷா கூறியுள்ளார்.